புதன், 27 ஏப்ரல், 2022

புதிய எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது? சோதனை முடிவுகள் என்ன?

புதிய எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது? சோதனை முடிவுகள் என்ன?

 உடலுக்குள் செலுத்தப்பட்ட பின் பெருகும் ஆர்என்ஏ தடுப்பூசிகளில் ஒன்றான, சுய-பெருக்கி எம்ஆர்என்ஏ தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 1/2/3 கட்ட சோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது. ARCT-154 என்ற தடுப்பூசி, கலிபோர்னியாவின் சான் டியாகோவை தளமாகக் கொண்ட Arcturus Therapeutics Holdings நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, அதன் சோதனைகள் வியட்நாமில் நடந்து வருகின்றன. இது கடுமையான கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புக்கு எதிராக 95% பாதுகாப்பையும், கொரோனா தொற்றுக்கு எதிராக 55% பாதுகாப்பையும் வழங்கியது என்று ஆர்க்டரஸ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதன் அர்த்தம் என்ன?: ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா போன்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை குறியீடாக்கும் மெசஞ்சர் ஆர்என்ஏவைப் பயன்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எம்ஆர்என்ஏ ஸ்பைக் புரதத்தின் நகல்களை உற்பத்தி செய்ய செல்லை வழிநடத்துகிறது, இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு உண்மையான தொற்று ஏற்பட்டால் ஸ்பைக்கை அடையாளம் கண்டு, அதற்கு எதிராகச் செயல்படும்.

ஒரு சுய-பெருக்கி எம்ஆர்என்ஏ தடுப்பூசி என்பது பாரம்பரிய ஆர்என்ஏ இயங்குதளத்தின் முன்னேற்றமாகும். இது தடுப்பூசி ஆன்டிஜெனுடன் கூடுதலாக நான்கு கூடுதல் புரதங்களை குறியீடாக்குகிறது, மேலும் இவை செல்லுக்குள் ஒருமுறை ஆர்என்ஏவின் அசல் இழையை பெருக்க உதவுகிறது. அடிப்படை நன்மை என்னவென்றால், இதற்கு ஒரு சிறிய டோஸ் மட்டும் போதும்.

சோதனை: இதற்கான சோதனை வியட்நாமில் நடந்தது. இந்தச் சோதனை, கொரோனா நோயின் கடுமையான சிக்கல்கள் கொண்ட அதிக ஆபத்தில் உள்ள நபர்கள் உட்பட 19,000 க்கும் மேற்பட்ட வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் 3 கட்டமான மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசி செயல்திறன் பகுதியில் 16,000 பங்கேற்பாளர்களுக்கு மேல் பங்கேற்றனர். இரண்டு டோஸ் தடுப்பூசி அளவுகளை முடித்த 7 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு இடையேயான பகுப்பாய்வு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பிற்கான 55% தடுப்பூசி செயல்திறனை நிரூபித்துள்ளது என்று அந்த வெளியீடு தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகள் ஆதிக்கம் செலுத்தியபோது வியட்நாமில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இடையே இந்த சோதனை முடிவுகள் கண்டறியப்பட்டன.

இந்த கடுமையான கொரோனா நோயின் பகுப்பாய்வில் (இறப்புகள் உட்பட) 43 கடுமையான பாதிப்புகளும் அடங்கும். மருந்துப்போலி குழுவில் நாற்பத்தி ஒன்றும், தடுப்பூசி போடப்பட்ட குழுவில் இரண்டு பாதிப்புகளும் 95% தடுப்பூசி செயல்திறனைக் காட்டுகின்றன என்று அந்த வெளியீடு கூறியது. மருந்துப்போலி குழுவில் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் தடுப்பூசி போடப்பட்ட குழுவில் ஒரு வயதானவர் பங்கேற்பாளர் இறந்துள்ளார் என்று நிறுவனம் விவரித்தது, அவர் கடுமையான கொரோனா தொற்றின் ஆபத்தில் இருந்தார்.

பாதகமான நிகழ்வுகள்: தடுப்பூசி சோதனையின் இரண்டு குழுக்களிலும் கோரப்படாத பாதகமான நிகழ்வுகளின் நிகழ்வுகள் ஒப்பிடத்தக்கவை என்று வெளியீடு கூறியது. மயோர்கார்டிடிஸ் அல்லது பெரிகார்டிடிஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை; எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகள் மிகவும் அரிதான நிகழ்வு என்று அவற்றை நம்பகத்தன்மையுடன் அவதானிக்கும் அளவுக்கு ஆய்வு பெரியதாக இல்லை என்று நிறுவனம் ஒப்புக்கொண்டது.

ஒவ்வொரு தடுப்பூசியையும் தொடர்ந்து, அடுத்த ஏழு நாட்களுக்கு ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் நாட்குறிப்புகளில் சேகரிக்கப்பட்ட பாதகமான நிகழ்வுகள் அடிப்படையில், இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவை லேசான அல்லது மிதமான தீவிரத்தன்மை கொண்டவை என்பதை நிரூபிக்கிறது. வெளிப்பட்ட பாதகமான நிகழ்வுகளில் பெரும்பாலானவை 7-நாள் கண்காணிப்பு காலத்திற்குள் தீர்க்கப்பட்டன.

தாக்கங்கள்: கொரோனாக்கு எதிராக Pfizer/BioNTech மற்றும் Moderna தடுப்பூசிகள் ஆகிய இரண்டு mRNA தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை உள்ளன. “புதிய தடுப்பூசி குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் வரலாம்: எளிதான சேமிப்பு, குறைந்த செலவுடன், ஏனெனில் அதன் ‘சுய-பெருக்கி’ வடிவமைப்பால் சிறிய டோஸ் மட்டுமே போதுமானது”, என்று அறிவியல் இதழ் கூறியது.

இருப்பினும், உலகின் பெரும்பகுதி ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் ஆர்க்டரஸ் தடுப்பூசி மிகவும் தாமதமாக அறிமுகமாவதால், இது குறைந்தபட்சம் முதன்மை தடுப்பூசியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவியல் இதழ் கூறியது.

source https://tamil.indianexpress.com/explained/how-self-replicating-mrna-covid-19-vaccines-work-and-what-trial-results-show-445849/