வெள்ளி, 22 ஏப்ரல், 2022

1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

 22 4 2022 

தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில், மே 8ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதனால், வடமாநில தொழிலாளர்களை பணிக்காக சென்னை அழைத்துவரும் நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்பட்டு, தடுப்பூசியும் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த மாதம் 8ம் தேதி, சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரொனா தாக்கத்தின் வீரியம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனவும், அவ்வாறு செயல்பட்ட்டால் கொரோனாவை வென்று விடலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


source https://news7tamil.live/special-vaccination-camps-will-be-held-inside-tamilnadu-in-1-lakh-places.html