22 4 2022 நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 241 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக 2,451 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 1,589 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/corona-rate-rises-in-india.html