27 4 2022
Fortnight after Ram Navami clash, demolition drive begins in Gujarat: மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியைத் தொடர்ந்து, குஜராத்தின் ஹிம்மத்நகர் நகராட்சி அமைப்பு, இந்த மாதம் ராம நவமி ஊர்வலங்களின் போது வகுப்புவாத மோதல்களைக் கண்ட ஒரு பகுதியில் “ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதன்” ஒரு பகுதியாக செவ்வாயன்று குடிசைகள், சிறிய கடைகள் மற்றும் கடைகள் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இடித்தது.
இன்றைய ஆக்கிரமிப்பு அகற்றும் இயக்கத்தில், சபாரியாவில் உள்ள டிபி சாலையில் 3-4 சிறு கடைகள், 2-3 குடிசைகள் மற்றும் இரண்டு மாடி கடை கட்டிடத்தை நாங்கள் அகற்றினோம்” என்று சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகரின் தலைமை நகராட்சி அதிகாரி நவ்நீத் படேல் கூறினார்.
மேலும், “சொந்த பகுதியின் அளவைத் தாண்டி சட்டவிரோத கட்டுமானத்தை நீட்டித்த கட்டிட உரிமையாளர்களால் சுமார் 15 மீட்டர் சாலையில் சுமார் மூன்று மீட்டர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. 2020ல் நாங்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். இது வழக்கமான ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையாகும், இதற்கும் ஏப்ரல் 10 அன்று நடந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து எடுப்போம், ”என்றும் நவ்நீத் படேல் கூறினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, இடிக்கப்பட்ட சொத்துக்களில் ஏப்ரல் 10 அன்று அப்பகுதியில் நடந்த வகுப்புவாத மோதல்களில் குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் சொந்தமானது இல்லை என்று தெரிவித்தனர். “செவ்வாய் அன்று, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நகராட்சி அமைப்பு எங்களுக்குத் தெரிவித்ததை அடுத்து, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று சபர்கந்தா எஸ்பி விஷால் வகேலா கூறினார்.
இடிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் ஹிம்மத்நகரில் உள்ள உள்ளூர் சமூக-மத அமைப்பான அஷ்ரப்நகர் ஜமாத்துக்கு சொந்தமானது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜமாத்தின் உறுப்பினர் கலுமியா ஷேக், கட்டிடத்தில் ஒரு சிகரெட் கடை, மின் சாதனங்கள் பழுதுபார்க்கும் கடை மற்றும் மளிகைக் கடை ஆகியவை இருந்தன. மூன்று மீட்டர் நீட்டிப்பு தொடர்பாக 2020ல் நகராட்சி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான். திங்களன்று, உள்ளூர் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கூறினார். இன்று, நீட்டிக்கப்பட்ட பகுதியை அகற்ற நாங்கள் அவர்களுக்கு உதவினோம் என்று கூறினார்.
ஏப்ரல் 10 அன்று, ராம நவமி ஊர்வலங்களின் போது குஜராத்தின் சப்பாரியாவில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன, இது கல் வீச்சு, கலவரம் மற்றும் தீ வைப்பு நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது, இந்தச் சம்பவம் 3-4 மணி நேரம் நீடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 22 பேரை கைது செய்தனர்.
ஏப்ரல் 11 ஆம் தேதி, ஹிம்மத்நகரில் உள்ள வன்சரவாஸ் பகுதியில் கல் வீச்சு சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏப்ரல் 15 ஆம் தேதி, குஜராத்தின் ஆனந்த் நகரில் ராம் நவமி ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் நிகழ்ந்து, ஒருவர் கொல்லப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் ஷகர்பூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் இயக்கத்தை நடத்தி 7-8 சிறிய கடைகளை இடித்தது.
கடந்த ஒரு மாதமாக, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 11 அன்று, மத்திய பிரதேசத்தில் கார்கோனில் ராம நவமி ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, உள்ளூர் நிர்வாகம் நான்கு பகுதிகளில் குறைந்தது 20 வீடுகள் மற்றும் கடைகளை இடித்தது.
ஏப்ரல் 20 அன்று, வடக்கு டெல்லியின் ஜஹாங்கீர்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து, பாஜக ஆளும் நகராட்சி அமைப்பின் அதிகாரிகள் வழிபாட்டுத் தலத்தின் வெளிப்புற வாயில் உட்பட பல கட்டமைப்புகளின் சில பகுதிகளை இடித்துள்ளனர். உ.பி.யில், குண்டர்கள் என பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டவர்களை குறிவைத்து வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த விவகாரம் காரணமாக, இந்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை “புல்டோசர் பாபா” என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்தனர்.
source https://tamil.indianexpress.com/india/fortnight-after-ram-navami-clash-demolition-drive-begins-in-gujarat-446411/