செவ்வாய், 26 ஏப்ரல், 2022

விமான நிலையம் தனியார்மயம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் சத்தீஷ்கர், ஜார்க்கண்ட்

 பொருளாதாரப் பிரச்சினைகளில் மத்திய-மாநில அரசுகள் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் வருவாயில் மாநில அரசுக்கு பங்கும், ஒப்படைக்கும் நிலத்திற்கு ஈடாக லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் கோரிக்கை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. சத்தீஸ்கர் ஆளும் காங்கிரஸ் அரசும், ஜார்க்கண்ட் ஆளும் ஜே.எம்.எம் அரசும், தமிழ்நாட்டின் முன்மொழிவுக்கு ஆதரவாக வந்துள்ளன.

மாநிலங்களால் வரையப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதாக இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தனியார்மயமாக்கல் முடிவுக்கு இடையூறு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

சத்தீஸ்கரின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் வணிக வரி அமைச்சர் டிஎஸ் சிங் தியோ கூறுகையில், இது மிகவும் தர்க்கரீதியானது. நீங்கள் நிலத்தை மத்திய அரசுக்கு வழங்கும்போது, ஒரு பங்குதாரராக மாறுகிறீர்கள். அது உங்களுடைய சொத்து. அந்தச் சொத்து வேறொரு தரப்பினருக்கு மாற்றப்படும்போது, குறிப்பாக வாங்குபவர் தனியாராக இருக்கும் பட்சத்தில், ஒரு பங்குதாரர் மட்டுமே பங்கைப் பெற முடியாது.மாநில அரசும் ஒரு பங்குதாரர்.அரசியலமைப்பின் போது வைக்கப்பட்ட மூலதனத்தைப் பொறுத்து அதன் பங்கைப் பெற வேண்டும்” என தெரிவித்தார்.

இதுதொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜார்கண்ட் நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஓரான், நிலம் அரசுக்கு சொந்தமானது. அதன் நடவடிக்கையும் மாநிலத்தில் தான் நடைபெறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வருவாய் பங்கைப் பெற்றால், நமது வருமானமும் உயரும்.அத்தகைய கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து நிலங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமானது. நாங்கள் தான் மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். எனவே, தனியார் மயமாக்கப்பட்டாலில் கிடைக்கும் வருவாயை, மாநில அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

அதேசமயம், ஒரு புதிய விமான நிலையம் கட்டப்படும்போதோ அல்லது ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை மேம்படுத்தும்போதோ, உள்கட்டமைப்பு மூலம் மாநிலத்திற்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மையத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றும் மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, “இது ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பயனளிக்கும் நேரடிப் பொருளாதாரச் செயல்பாடு. விமான நிலையம் மேம்படுத்தப்பட்டாலும், அதன் சுற்றியிருக்கும் பகுதி மக்களுக்கு நன்மைகள் அதிகரிக்கிறது. மாநில அரசு பலன் கிடைக்கிறது. அங்கிருக்கும் நிலங்களின் மதிப்பு உயர்கிறது. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற கோரிக்கைகள் AAI உடன் பகிர்ந்து கொள்வதற்கு கூடுதலாக கூடுதல் அவுட்கோ உருவாக்கினால், திட்டத்தின் முடிவை பாதிக்கும் என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு ஏஏஐ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், நிதி ஆயோக் தரப்பில் பதில்வரவில்லை.

தேசிய பணமாக்க பைப்லைன் படி, இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) நடத்தப்படும் 25 விமான நிலையங்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் சொத்து பணமாக்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு ஏஏஐ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் பதிலளிக்கவில்லை.

தேசிய பணமாக்க பைப்லைன் படி, இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) நடத்தப்படும் 25 விமான நிலையங்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் சொத்து பணமாக்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: புவனேஷ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், திருச்சி, இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், நாக்பூர், பாட்னா, மதுரை, சூரத் , ராஞ்சி, ஜோத்பூர், சென்னை, விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு அதானி என்டர்பிரைசரஸூக்கு குத்தகைக்கு விட்டுள்ள மத்திய அரசு, இதுவரை 6 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கியுள்ளது.

புதிய விமான நிலையம் கட்டப்படும்போது அல்லது ஏற்கனவே உள்ள விமான நிலையம் AAI ஆல் விரிவுபடுத்தப்படும்போது, ​​மாநில அரசுகள் அவற்றை 99 வருட குத்தகைக்கு 1 ரூபாய்க்கு AAIக்கு மாற்றுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு, காலி செய்யப்பட்டு பின்னர் AAI க்கு மாற்றப்படுகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய தொழில் கொள்கையில், தமிழக அரசு கூறியதாவது, ஒட்டுமொத்த திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் விலையே பெரும் பங்காக உள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் கொள்கையை தீவிரமாக பின்பற்றி வருகிறது.எனவே, மாநில அரசு நிலங்களை இலவசமாக AAI க்கு கையகப்படுத்தி, மாற்றும் பட்சத்தில், AAI அல்லது இந்திய அரசு சொத்துக்களை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் மதிப்பு/வருமானம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/privatised-airports-chhattisgarh-and-jharkhand-back-tn-on-revenue-share-445372/