ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக- கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

 கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில் எச்.5 என்.1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Flu ke1.jpg

அதன்படி, தமிழக- கேரள மாநில எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி,  மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், 

 நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12  சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறை சிறப்புக் குழுவினர்  24 மணி நேரமும்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Flu ke2.jpg

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்களை கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Flu ke3.jpg

செய்தி: பி.ரஹ்மான்



source https://tamil.indianexpress.com/tamilnadu/bird-flu-check-post-in-coimbatore-4497530