வியாழன், 28 ஏப்ரல், 2022

இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க சாத்தியமில்லை

 

இந்தியாவில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டு சர்வதேச நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து பிரதமர் மோடியை குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒன்றாக இருக்க முடியாது என கூறினார்.

ராகுல் காந்தி தனது பதிவில், இந்தியாவை விட்டு 7 சர்வதேச நிறுவனங்கள் வெளியேறியுள்ளன, 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 84 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழக்க நேர்த்தது

மோடி ஜி, இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது. எனவே, இந்தியாவை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சனையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நாட்டைவிட்டு வெளியேறிய ஏழு சர்வதேச நிறுவனங்களை காட்டும் படத்தை இணைத்திருந்தார்.

அதில், 2017இல் செவ்ரோலெட், 2018இல் மேன் டிரக்ஸ், 2019இல் ஃபியாட் மற்றும் யுனைட்டெட் மோட்டார்ஸ், 2020இல் ஹார்லி டேவிட்ஸன், 2021இல் ஃபோர்டு, 2022இல் டாட்ஸன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

வேலையிழப்பு பிரச்சினை தொடர்பாக காந்தியும் காங்கிரஸும் அரசாங்கத்தை தொடர்ச்சியாக குற்றச்சாட்டி வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/india/hate-in-india-make-in-india-rahul-gandhi-slams-pm-modi-446504/