வரவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் சுமையை நீக்கும் வகையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமைப் பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநில அரசு பள்ளிகளை திறந்தது. மே மாதம் பொதுத் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளனர்.
தேர்வுக்கான சிலபஸை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. முன்னுரிமை அளிக்கப்பட்ட சிலபஸை மட்டும் படிக்குமாறு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் கல்வி சங்க செயலர் நந்த குமார் கூறுகையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. கொரோனா காரணமாக தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்காமல் இருந்து வந்தனர். அனைவருக்கும் தேர்ச்சி என்பது சிறப்பானதாக இருக்காது என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/taking-the-burden-off-students-to-prepare-for-upcoming-board-exams-syllabus-447342/