Harish Damodaran
உலக அளவில் ஒரு பொருளை மிகப்பெரிய அளவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாட்டில் அந்த பொருளுக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிகழ்வும் அரிதினும் அரிதாகவே நடைபெறும். அரசாங்கத்தை விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுமதியில் தடைகளை அறிமுகப்படுத்த கட்டாயப்படுத்தும் அளவுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. எங்கே, என்ன பொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்று கேட்கின்றீர்களா? விளக்கம் கீழே
இந்தோனேசிய பனை எண்ணெய்க்கு தான் இத்தகைய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. . அமெரிக்க வேளாண் துறை 2021-22 (அக்டோபர் – செப்டம்பர்) வரையிலான காலகட்டத்தில் 45.5 மில்லியன் டன் பாமாயிலை இந்தோனேசியா உற்பத்தி செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. உலகளாவிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் மலேசியா (18.7 மெட்ரிக் டான் இடம் பெற்றுள்ளது. அதே போன்று உலகா அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகாவும் இந்தோனேசியா உள்ளது. உலக நாடுகளுக்கு 29 மெட்ரிக் டன் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது இந்தோனேசியா. அதனைத் தொடர்ந்து மலேசியா 16.22 மெட்ரிக் டன் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது.
விலைக்கட்டுப்பாடு மட்டுமின்றி எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பில் 20% எண்ணெய்யை உள்நாட்டு சந்தைக்கு தர வேண்டும் என்றும் அரசு ஆணை பிறப்பித்தது.
காரணம் என்ன?
இதற்கு இரண்டு வகையான காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று மனிதர்கள் மற்றும் இயற்கையால் சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தடைகள். பனை எண்ணெய் (49.63 மெட்ரிக் டன்) மற்றும் சோயா எண்ணெய்க்கு (12.39 mt) அடுத்தபடியாக அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்யாக சூரியாகாந்தி எண்ணெய் உள்ளது என்று கூறுகிறது யூ.எஸ்.டி.ஏ.. பிப்ரவரி மாதம் 24ம் தேதி அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தால் கருங்கடல் துறைமுகங்களை பயன்படுத்துவதில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் சிக்கல் நிலவி வருகிறது. மேலும் உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடையின் காரணமாகவும் எண்ணெய் வர்த்தகம் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. உலக அளவில் சூரிய காந்தி எண்ணெய் வர்த்தகம் 80% உக்ரைன் மற்றும் ரஷ்யாவையே அதிகம் சார்ந்துள்ளது.
சோயாபீன் எண்ணெய் தட்டுப்பாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தென் அமெரிக்காவில் நிலவும் வறட்சியான சூழலும் இதற்கு ஒரு முக்கிய காரணம். பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் பாராகுவே நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சோயா எண்ணெய்யின் அளவு 9.4% ஆக குறைந்துள்ள்ளது என்று கூறுகிறது யூ.எஸ்.டி.ஏ.. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான உற்பத்தி இதுவாகும். சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கு போர் மற்றும் வறட்சி காரணத்தினால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது காரணம் பெட்ரோலியத்துடன் தொடர்புடையது. குறிப்பாக பனை எண்ணெய் இயற்கை எரிபொருளாக பயன்படுத்தபடுவது முக்கியமான இரண்டாவது காரணமாக கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டு முதல் படிம எரிபொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக டீசல் உடன் 30% பாமாயிலை கலந்து பயன்படுத்த வேண்டும் என்று இந்தோனேசிய அரசு அறிவித்தது. உள்நாட்டு தேவைக்காக பயன்படுத்தப்படும் மொத்த பாமாயில் அளவு 17.1 மெட்ரிக் டன்னாக இருக்கும் போது இயற்கை எரிபொருள் பயன்பாட்டிற்காக 7.5 மெட்ரிக் டன் பாமாயில் எண்ணெய் வீட்டு மற்றும் இதர தேவைகளுக்காக 9.6 மெட்ரிக் டன் பாமாயில் எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது.
பயோ-டீசலுக்கு அதிகளவில் பாமாயில் திருப்பி விடப்படுவதால், உள்நாட்டு சமையல் எண்ணெய் மற்றும் ஏற்றுமதி சந்தைக்கு குறைந்த அளவு கிடைக்கிறது என்று மும்பையை தளமாகக் கொண்ட சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பி வி மேத்தா கூறினார். உக்ரேனியப் போருக்குப் பிறகு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் விலை 127.98 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்து 100 டாலர்கள் என்ற நிலையில் நீடித்து நிற்பதால் இத்தகைய திசை திருப்பம் மிகவும் ஆச்சரியம் அடையவைத்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட இருக்கும் தாக்கம் எத்தகையது?
உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. அதன் வருடாந்திர இறக்குமதியான 14-15 மில்லியன் டன்களில் முதலிடம் பிடித்துள்ளது பாமாயில் (8 – 9 மெட்ரிக் டன்), அதனைத் தொடர்ந்து சோயாபீன் (3 – 3.5 மெட்ரிக் டன்), சூரியகாந்தி எண்ணெய் 2.5 மெட்ரிக் டன் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தோனேஷியா உள்ளது. 2021-22ல் மலேசியாவை முந்திய போதிலும், இந்தோனேஷியா இந்தியாவின் சிறந்த பாமாயில் சப்ளையராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 16-17 அன்று, இந்தோனேசிய அரசாங்கம் பாமாயிலின் மீதான அதன் சில்லறை விலை உச்சவரம்பையும், ஏற்றுமதியாளர்கள் மீதான 30% உள்நாட்டு சந்தை விற்பனைக் கடமையையும் நீக்கியது. அதே சமயத்தில் ஏற்றுமதிக்கான ப்ரோக்ரெஷிவ் வரியை விதித்தது. இந்த விகிதங்கள் ஒரு டன்னுக்கு $175 முதல் (ஏற்றுமதி விலை $1,000-1,050) $375 வரை (விலைகள் $1,500க்கு மேல் இருக்கும் போது).
ஏற்றுமதியின் மீதான கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு ஆகியவை இருந்தாலும் கூட, இந்தோனேசியாவின் அதிக மக்கள் தொகை மற்றும் அதன் லட்சிய உயிரி-எரிபொருள் திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் உலக நாடுகள் குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய இறக்குமதியாளர்கள் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவை குறைத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த சமையல் எண்ணெயின் இறக்குமதி விலைகளில் தற்போது தளர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போதைய விலைகள் அதிகமாகவே உள்ளது. இது இந்தியாவில் உள்ள வீடுகள் மற்றும் சோப்பு மற்றும் அழகுசாதன தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட தொழில்துறை நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும். கடந்த மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நேரத்தில் முறையே $2,000 மற்றும் $1,175 ஆக இருந்த CPOவின் விலைகள் தற்போது தற்போது ஒரு டன்னுக்கு $1,750 ஆக உள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/indonesias-palm-oil-crisis-and-its-implications-for-india-437630/