புதன், 1 நவம்பர், 2023

ஆளுனர் க்கு எதிரான ரிட் மனு: தமிழக அரசின் புகார்கள் என்னென்ன?

 ஆர்.என்.ரவி

ஆளுனர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் முக்கிய மசோதாக்களை பரிசீலிக்க தவறுதல், ஒப்புதல் அளிக்க மறுத்தல், நிலுவையில் வைத்தல் உள்ளிட்ட செயல்கள் மூலம், “அரசியல் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளார்” எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

மேலும், சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அரசியல் போட்டியாக ஆளுநர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதாகவும் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடர்ந்து மனுவில், “அவரது செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையே ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது. கவர்னர் குடிமக்களின் ஆணையை வைத்து விளையாடுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் ஆகியோர் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “ஆளுனர் ஆர்.என். ரவி தனது அலுவலகத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் அரசாங்க உத்தரவுகளை பரிசீலிக்க ஒரு காலக்கெடு அல்லது "வெளியான கால வரம்பு" நிர்ணயம் செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களின் தார்மீக பிரச்னைகள், கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் வழக்குகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தவறிவிட்டார்.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான பல்வேறு விண்ணப்பங்கள் இன்னும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

தற்போது, TNPSC, தலைவர் இல்லாமல் வெறும் நான்கு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக கூடுதல் பொறுப்பை வகிக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் சில கேள்விகளை எழுப்பிய குறிப்புடன் செப்டம்பர் 27 அன்று கோப்பை திருப்பி அனுப்பினார். இது, அரசியலமைப்பு பதவிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு எதிரானது.

அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக முதன்மையான ஆதாரங்கள் கிடைத்த போதிலும் விசாரணை நடத்த அனுமதி மறுக்கிறார்.

உச்சநீதிமன்றம் அங்கீகரித்த சிபிஐ விசாரணையும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் இதில் அடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-writ-petition-against-r-n-ravi-in-supreme-court-1679505