6 11 23
mk-stalin | இந்திய வம்சாவளி அல்லது மலையக தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து, முக்கியமாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கை தீவு நாட்டிற்கு வந்ததன் 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அந்நாட்டின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ‘நாம் 200’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்மை விருந்தினராக இருந்தார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அழைக்கப்பட்டதாகவும், அவரது பயணத்துக்கு மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கும் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் பேசிய காட்சிகள் அங்குள்ள தமிழ் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் பகிரவும் பட்டுள்ளன.
இது குறித்து இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்தன, காங்கிரஸ் எம்பி சசி தரூர், அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ராம் மாதவ், கவர்னர் தமிழிசை மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை ஆகியோர் உரையாற்றியுள்ளனர்
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-stalins-video-address-not-telecast-in-sri-lanka-1687480