காசாவில் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று மீண்டும் அறிவித்துள்ள இஸ்ரேல், அதேநேரத்தில் மனிதநேய உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில், காசாவில் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று மீண்டும் அறிவித்துள்ள இஸ்ரேல், அதேநேரத்தில் மனிதநேய உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/no-ceasefire-in-gaza-but-humanitarian-aid-will-be-allowed-israel.html