ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே, இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த அணை திறப்பு விழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றிருந்தார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.
அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியது.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
source https://news7tamil.live/the-helicopter-crash-in-which-the-president-of-iran-was-traveling.html