புதன், 15 மே, 2024

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து : ஒருவர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம்

 

இந்திய தலைநகர் டெல்லியில் ஐடிஓ பகுதியில் சி.ஆர் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வருமானவரி துறை அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் மரணமடைந்ததாக காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஐடிஓ பகுதியில் சி.ஆர் கட்டிடத்தில் 4-வது மாடியில் வருமாவரித்துஅறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 21 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில்கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்5 ஆண்டகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .இது குறித்து சமூக ஊடகங்களில் வெளிவந்த சில வீடியோக்களின் படிகட்டிடத்தில் இருந்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்கும் போது ஜன்னல் ஓரத்தில் தஞ்சம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஏணி வழியாக கீழே இறங்க உதவியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/delhi-one-dead-in-fire-at-income-tax-cr-building-at-ito-4575624