சனி, 11 மே, 2024

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடைசி இடத்தில் சென்னை; முன்னேறிய திருச்சி, தஞ்சை

 தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படிதமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53%. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.

பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர்அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கைராமநாதபுரம்கன்னியாகுமரிதிருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.

பின்தங்கிய மாவட்டமாக அறியப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் 97.02 சதவிகிதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும்ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவிகிதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும்கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும்திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 94.28 சதவீத மாணவமாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில்இந்தாண்டு கொஞ்சம் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.40 சதவீத மாணவமாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 15-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 14,402 பேர்மாணவிகள் 14,513 பேர் என மொத்தம் 8,915 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுதி இருந்தனர்.

இதில் 27,006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 90.49 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி  96.29 சதவீதம் ஆகும். மொத்தம் 93.40% மாணவமாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் தான் அதிகம் உள்ளது.

தஞ்சை மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு மாநில அளவில் 17ம் இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு இரண்டு இடம் முன்னேறி 15-ம் இடத்தை பிடித்துள்ளது.

82.07 சதவீதத்துடன் வேலூர் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது. வேலூர்ராணிப்பேட்டைதிருவண்ணாமலைதிருவள்ளூர்கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன. தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் 30வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-sslc-10th-result-2024-chennai-at-the-last-place-4551456

Related Posts: