வெள்ளி, 10 மே, 2024

நீட் தேர்வு இல்லாமல் டாக்டர் ஆகலாம்? கல்வியாளர் டிப்ஸ்!

 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் என்றும், நீட் தேர்வு இல்லாமல் மருத்துவராவது எப்படி என்பதையும் இப்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் என கல்வியாளர் ராஜராஜன் தந்தி டிவியில் மாணவர்களுக்கு டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட படிப்புகள் எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளன. அதேநேரம் கோர் இன்ஜினியரிங் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு எப்போதும் சிறந்த எதிர்காலம் உள்ளது. கோர் படிப்புகளை படித்தால், ஐ.இ.எஸ் தேர்வு எழுதலாம்.

நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை பெறலாம். அதேநேரம் நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமலும் டாக்டராகலாம். இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிக்க நீட் மதிப்பெண் தேவையில்லை, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதும். இது தவிர, பிசியோதெரபிஸ்ட், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளையும் தேர்வு செய்யலாம். 

வணிகவியல் மாணவர்கள், பி.காம், சி.ஏ படிப்புகளை தேர்வு செய்யலாம். பி.எஸ்.சி படிப்புகளில் கம்ப்யூட்டர் சார்ந்த நிறைய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இவற்றை தேர்வு செய்யலாம்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-12th-student-education-tips-neet-engineering-courses-4550629