சனி, 18 மே, 2024

கோவை சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டில் பனிமலை போல் பொங்கிய நுரை- மக்கள் அச்சம்

 கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர்ஈரோடு மாவட்டங்கள் வழியாக காவிரியாற்றில் கலக்கிறது. இந்த ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆறு வருகின்ற வழித்தடமான சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளால் அடிக்கடி இந்த ஆற்றில் மாசு ஏற்படுகிறது.

Coimbatore

இந்த நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால்அப்பகுதியில் இருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றின் மீது நுரை படலமாக படர்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Coimbatore

அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், இதனை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-rains-noyyal-river-froths-sunnambu-kalvai-4582032

Related Posts: