செவ்வாய், 7 மே, 2024

TN 12th Result 2024: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி;

 6 5 2024

தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (DGE) மே 6 ஆம் தேதி (காலை 9:30 மணி) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்கிறது. இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன, சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். மேலும் முக்கிய பாடங்களின் தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது, இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு அறிவியல், கலை மற்றும் வணிகவியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டது மற்றும் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெற்றது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-12th-result-2024-live-updates-tndge-to-announce-tamil-nadu-2-hse-results-on-may-6-4538374