வெள்ளி, 17 மே, 2024

வாரணாசியில் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடும் 36 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு” –

 

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உட்பட 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட முன்வந்த நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா உள்பட 36 பேரின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரங்கீலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  “வாரணாசி தொகுதியில் போட்டியிடும் 55 வேட்பாளர்களில், 36 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உட்பட 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எனது ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவும் தடை ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உதவி செய்ய மறுத்துவிட்டது.

இன்று, மாவட்ட ஆட்சியர் என்னிடம் எனது ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், நான் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவர்கள் என்னுடன் வழக்கறிஞர்களை உள்ளே அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. என்னை தனியாக வரச்சொன்னார்கள். என் நண்பர் தாக்கப்பட்டார். மோடி அழுது நாடகமாடலாம். ஆனால் நான் இங்கு அழ விரும்பவில்லை.


நேற்று 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பார்த்து சிரிப்பதா அழுவதா” என்று பதிவிட்டுள்ளார்.

வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில் ரங்கீலாவின் பதிவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிரமாணப் பத்திரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு இணங்கத் தவறியது ஆகிய காரணங்களுக்காகவே ரங்கீலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளது.

source https://news7tamil.live/nominations-of-36-candidates-against-pm-in-varanasi-rejected-candidate-and-comedian-shyam-rangeela-post.html

Related Posts:

  • Amartya Sen to India Today: Kashmir brutality biggest blot on our democracy Amartya Sen to India Today: Kashmir brutality biggest blot on our democracy Nobel laureate Amartya Sen today said that the Kashmir situation is bi… Read More
  • Justice thanks Photo shared from ( தடா ஜெ.ரஹிம்) … Read More
  • காஷ்மீர் அப்பாவி முஸ்லிம்களுக்காக அணி திரள்வோம்! காஷ்மீர் அப்பாவி முஸ்லிம்களுக்காகஅணி திரள்வோம்!- அநியாயத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்போம்! உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்நாள் : 17.07.16 ஞாயிற்றுக்கிழமைஇ… Read More
  • நமது சொத்தின் பட்டா மாறுதலுக்காக தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம் ! நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் … Read More
  • பாங்கு சத்தம்... பாங்கு சத்தம்... சிண்டு முடியும் 'பாண்டே'வுக்குசெருப்படி பதில்..! நன்றி: Mr Gurunathan Sivaraman … Read More