ஞாயிறு, 19 மே, 2024

ஆதார் தொலைந்துவிட்டதா? உடனே இ-ஆதார் இப்படி அப்ளை செய்யுங்க

 ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். ஷாப்பிங் முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நீங்கள் தவறுதலாக ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்கள் என்றால் இ-ஆதார் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம் இது உங்கள் போனில் இருப்பதால் நீங்கள் வெளியில் செல்லும் போது ஆதார் அட்டை எடுத்து செல்ல மறந்துவிட்டீர்கள் என்றாலும் இதை பயன்படுத்தலாம். இதுவும் அதிகாரப்பூர்வமானது தான். 

இ-ஆதார் அப்ளை செய்வது எப்படி? 

1. அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI-ன் eaadhaar.uidai.gov.in-ல் செல்லவும். 

2. ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆதாரை டவுன்லோடு செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

3. வழக்கமான ஆதார் அல்லது Masked ஆதாரை பதிவிறக்கம் செய்ய தேர்வு செய்யவும்.

4.  உங்களின் ஆதார் எண், முழுப்பெயர் மற்றும் உங்கள் ஏரியா பின் கோடை உள்ளிடவும்.

5. Security Code என்டர் செய்யவும்.

6.  Request OTP கிளிக் செய்யவும். 

7. உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்படும்.

8.  இதன் பின் அதில் பாஸ்வோர்ட் பயன்படுத்தி இ-ஆதார் டவுன்லோடு செய்யலாம். 


source https://tamil.indianexpress.com/technology/how-to-download-e-aadhaar-card-4584791