வியாழன், 9 மே, 2024

“மக்களின் மனதின் குரலைக் கேளுங்கள்!” – பிரதமர் மோடிக்கு ஒய்எஸ் சர்மிளா ரேடியோ அனுப்பி வைப்பு!

 

மக்களுடைய மனதின் குரலை கேளுங்கள் என மக்களின் பேச்சுகளை பதிவு செய்து பிரதமர் மோடிக்கு ரேடியோ அனுப்பி வைத்தார் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா. 

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே. 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனிடையே பிரதமரின் வருகை குறித்து ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ். சர்மிளா செய்தியாளர்களிடம் பேசியதாவது;

ஆந்திர மாநிலத்தில் நுழைவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை பாஜக ஏமாற்றியுள்ளது. ஆந்திர மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை காட்டும் மோடி, நலத்திட்டங்கள் என வரும்போது ஆந்திரத்தை மறந்துவிடுகிறார்.

ஆந்திர மக்கள் முன்பு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறேன். தைரியம் இருந்தால் அதில் ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்பதை எழுத்துப்பூர்வமாக குறிப்பிட முடியுமா? என ஷர்மிளா கேள்வி எழுப்பினார்.

மேலும் மக்களுடைய மனதின் குரலைக் கேளுங்கள் மோடி என்று ரேடியோவில் குரல் பதிவு செய்து அதனை பிரதமர் மோடி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா அனுப்பிவைத்துள்ளார்.



source https://news7tamil.live/listen-to-the-voice-of-the-people-send-ys-sharmila-radio-to-prime-minister-modi.html