சனி, 11 மே, 2024

தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலி – வெளியான அதிர்ச்சித் தகவல்!

 

This News Fact Checked by PTI

This News Fact Checked by PTI

தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலியானது என்பது உண்மை சரிபார்பில் அம்பலமாகியுள்ளது.

சமூக ஊடக பயனர்கள் அமுலின் புகைப்படத்துடன் மக்களை வாக்களிக்குமாறு பரிந்துரைக்கும் இந்தி வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.  PTI  உண்மை சரிபார்ப்பு குழு விசாரணை நடத்தியதில் அமுல் பெயரில் பகிரப்பட்ட விளம்பரம் புனையப்பட்டது என்று கண்டறியப்பட்டது.  அத்தகைய விளம்பரம் அமுல் நிறுவனத்தால் உருவாக்கப்படவில்லை,  பகிரப்படவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒரு X பயனர் மே 6-ஆம் தேதி அன்று இந்தி வாசகத்துடன் கூடிய அமுலின் லோகோவை பகிர்ந்துள்ளார்.  அதன் மொழி பெயர்ப்பு விவரம் பின்வருமாறு “வாக்களிப்பதா வாக்களிக்காமல் விடுவதா…. சரியான முடிவை எடுங்கள். உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது.

தொடர் விசாரணையில் கூகுல் லென்சை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் இந்த பதிவை ஃபேஸ்புக் பயனர் ஒருவரும் பகிர்ந்தது தெரியவந்தது.

தேடல் முடிவுகளை மேலும் ஸ்கேன் செய்ததில்,  மே 5 அன்று,  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியின் X தளப்பக்கத்தில் இதே புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

தொடர் விசாரணையில் இதே புகைப்படத்துடன் அமுல் ஒரு பதிவொன்றை வெளியிட்டிருந்தது.  அதன் வாயிலாக வைரல் ஆன பதிவு குறித்து ஒரு தெளிவு கிடைத்தது.

அமுலின் அந்த X தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அமுல் பொதுநலனுக்காக வெளியிட்டது

வாட்ஸ் ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் அமுல் பதிவிட்டது போன்ற ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.  இந்த விளம்பரம் அமுல் நிறுவனத்தால் உருவாக்கப்படவில்லை.  அந்த பதிவில், இந்த போலி விளம்பரத்தை உருவாக்கியவரின் பெயர் “p k anil” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அவருக்கு எதிராக அமுல் சட்ட நடவடிக்கை எடுக்கும்.

நடந்து வரும் தேர்தலில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு அனைத்து வாக்காளர்களையும் அமுல் வலியுறுத்துகிறது.  மேலும் இந்த போலி விளம்பர எச்சரிக்கையை உங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தயவு செய்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அமுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அதன் ஸ்க்ரீன் ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

பல சமூக ஊடக பயனர்கள் அமுலின் லோகோ மற்றும் உரையுடன் கூடிய கிராஃபிக் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்,  இது மக்களை புத்திசாலித்தனமாக வாக்களிக்க ஊக்குவிக்கிறது.  PTI விசாரணையில், அமுல் பெயரில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விளம்பரம் போலியானது என்று கண்டறிந்துள்ளது.


source https://news7tamil.live/amul-advertisement-related-to-elections-has-been-exposed-as-fake.html

Related Posts: