வியாழன், 31 அக்டோபர், 2024

சமரசமில்லா சத்திய மார்க்கம்!

சமரசமில்லா சத்திய மார்க்கம்! A.ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ R.S மங்கலம் - இராமநாதபுரம் வடக்கு பொதுக்கூட்டம் - 27.09.2024

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹிம் நபி

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹிம் நபி செங்கோட்டை N.பைசல் மாநிலச் செயலாளர்,TNTJ கறம்பக்குடி - புதுக்கோட்டை பொதுக்கூட்டம் - 27.09.2024

இல்லத்தை இனிமைப்படுத்திய இப்ராஹீம் (அலை)

இல்லத்தை இனிமைப்படுத்திய இப்ராஹீம் (அலை) எம்.ஐ.சுலைமான் - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ தர்பியா - 29.09.2024 சிதம்பரம் - கடலூர் தெற்கு மாவட்டம்

சமூகத்தீமைகளை வேரறுப்போம்!

சமூகத்தீமைகளை வேரறுப்போம்! காஞ்சி ஏ.இப்ராஹீம் - மாநிலப் பொருளாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 21.09.2024 ஏழு கிணறு கிளை - வட சென்னை மாவட்டம்

கடன் உள்ளவர் ஹஜ் செய்ய அனுமதி உள்ளதா?

கடன் உள்ளவர் ஹஜ் செய்ய அனுமதி உள்ளதா? எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக்குழுத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 03.05.2019 பீம நகர் திருச்சி மாவட்டம்

முஸ்லிம்கள் திருமணத்தின்போது பெண்கள் முகத்தை பார்க்கக்கூடாதா?

முஸ்லிம்கள் திருமணத்தின்போது பெண்கள் முகத்தை பார்க்கக்கூடாதா? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

இஸ்லாத்தில் வட்டி வாங்குவதோ கொடுப்பதோ தடுக்கபட்டுள்ளது ஆனால் இன்றைய காலத்தில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமா?

இஸ்லாத்தில் வட்டி வாங்குவதோ கொடுப்பதோ தடுக்கபட்டுள்ளது ஆனால் இன்றைய காலத்தில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமா? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

முஸ்லிம்கள் பிரியாணி செய்தால் மட்டும் சுவையாக இருப்பதற்கு என்ன காரணம்?

முஸ்லிம்கள் பிரியாணி செய்தால் மட்டும் சுவையாக இருப்பதற்கு என்ன காரணம்? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ வட சென்னை மாவட்டம் எக்மோர் அருங்காட்சியகம் - 15.09.2024

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை N.அல் அமீன் மாநிலச் செயலாளர்,TNTJ வட சென்னை மாவட்டம் - எக்மோர் - 15.09.2024

வெள்ளி காப்பு அணியலாமா?

வெள்ளி காப்பு அணியலாமா? பதிலளிப்பவர்: A.அபூபக்கர் M.I.Sc பேச்சாளர்,TNTJ வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 23.10.2024

அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று சுருக்கி எழுதுவதும் 786 போல்தானே உள்ளது?

அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று சுருக்கி எழுதுவதும் 786 போல்தானே உள்ளது? பதிலளிப்பவர்: A.அபூபக்கர் M.I.Sc பேச்சாளர்,TNTJ வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 23.10.2024

மலக்குமார்களுக்கு மனிதர்கள் பூமியில் குழப்பம் செய்வார்கள் இரத்தம் சிந்துவார்கள் என்று முன்பே எப்படி தெரியும்

மலக்குமார்களுக்கு மனிதர்கள் பூமியில் குழப்பம் செய்வார்கள் இரத்தம் சிந்துவார்கள் என்று முன்பே எப்படி தெரியும் K.தாவூத் கைசர் M.I.Sc மாநிலத்துணைத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 18.08.2024 சுப்ரமணியபுரம் - மதுரை மாவட்டம்

தொழாதவர்களுக்கான ஸகர் எனும் நரகம் பற்றியும் தொழுதவர்களுக்கான சொர்கத்தை பற்றியும் விளக்கவும்

தொழாதவர்களுக்கான ஸகர் எனும் நரகம் பற்றியும் தொழுதவர்களுக்கான சொர்கத்தை பற்றியும் விளக்கவும் K.தாவூத் கைசர் M.I.Sc மாநிலத்துணைத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 18.08.2024 சுப்ரமணியபுரம் - மதுரை மாவட்டம்

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 30.10.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 30.10.2024 பதிலளிப்பவர் : M.A.அப்துர் ரஹ்மான் M.I.Sc 1.கருப்பு கயிற்றில் சூரா ஓதி முடிச்சி போடலாமா? 2.குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை சொந்த விளக்கத்தில் நாம் விளக்கம் கொடுக்கும் போது ஸஹாபாக்களின் கருத்தை நாம் ஏன் ஏற்கக்கூடாது?

பயனற்ற செலவுகள்

பயனற்ற செலவுகள் எஸ்.முஹம்மது யாசிர் மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 25.10.2024

கணவனும், தந்தையும்

கணவனும், தந்தையும் கே.எம்.சல்மான் பேச்சாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 25.10.2024

நீதிக்கு எது சாட்சி?

நீதிக்கு எது சாட்சி? E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 24.10.2024

உலகின் பட்டினித் தலைநகரமா இந்தியா?

உலகின் பட்டினித் தலைநகரமா இந்தியா? K.ரஃபீக் முஹம்மது செய்தியும் சிந்தனையும் - 25.10.2024 234 Million Indians in Extreme Poverty

ஈஷா யோகா மீது குவியும் புகார்கள் காரணம் என்ன?

ஈஷா யோகா மீது குவியும் புகார்கள் காரணம் என்ன? ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 26.10.2024

தமிழக வெற்றிக்கழகம் - தன்னிலை மறந்த தமிழர்கள்..

தமிழக வெற்றிக்கழகம் - தன்னிலை மறந்த தமிழர்கள்.. உரை: S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 29.10.2024

பாசிசமா? பாயாசமா?

பாசிசமா? பாயாசமா? ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 30.10.2024

காற்றின் தரம்

 பொதுவாக காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. "மோசமானது" என்றால் AQI 201-300, "மிகவும் மோசமானது" என்றால் AQI 301-400, "கடுமையானது" என்றால் AQI 401-450, "கடுமையாகத் தீவிரமானது" என்றால் AQI 450க்கு மேல் என்பது காற்றின் தரத்தின் அளவுகோலாகும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-air-quality-level-weaken-amid-diwali-firecrackers-pollution-7375516

இந்தநிலையில், சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 254, ஆலந்தூரில் 248, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது. கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 என மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

புதன், 30 அக்டோபர், 2024

43,000-ஐ கடந்த உயிரிழப்பு!

 

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.

இதனைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. ஓராண்டு கடந்தும் இரு நாடுகளுக்கிடையே தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. மேலும் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனான், ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலும் தொடர்ந்து இந்த மூன்று நாடுகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக காஸாவின் குடியிருப்புப் பகுதிகள் மேல் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல்களில் அதிகம் உயிரிழந்தவர்கள் குழந்தைகளும், பெண்களுமே ஆவர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐ.நாவும் தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வரை காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“காஸா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 96 பேர் உயிரிழந்தனர். 227 பேர் காயமடைந்தனர். கடந்தாண்டு போர் தொடக்கத்திலிருந்து உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 43,020ஐக் கடந்துள்ளது. 1,01,110 பேர் காயமடைந்துள்ளனர். பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினரால் அவர்களை கண்டுபிடிக்கக் கூட முடியவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/israel-attack-over-43000-dead-in-gaza.html

தாக்குதலை குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது” – #Iran தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி!

 

இஸ்ரேலின் தாக்குதலை குறைத்து மதிப்பிடவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்தார்.

அக்டோபர் மாத தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று முன்தினம் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தாக்குதலை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தவறான கணக்கீடுகள் சீர்குலைக்கப்பட வேண்டும். ஈரானிய தேசம் மற்றும் அதன் இளைஞர்களின் வலிமை, விருப்பம் மற்றும் முன்முயற்சி என்ன என்பதை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும். அதனை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் நலன்களுக்கு சேவை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாத துவக்கத்தில் லெபனானின் ஹில்புல்லா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் மீது 150க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வீசியது. இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். மேலும் கடந்த 7ஆம் தேதி போர் தொடங்கி ஒரு வருடம் ஆனதையடுத்து,  தங்கள் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி, ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. 

ஈரானும் இந்த தாக்குதலுக்கு தயாராகி வந்தது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரானின் ராணுவ தளங்கள்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. மேலும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.


source https://news7tamil.live/israeli-attack-should-neither-be-underestimated-nor-exaggerated-iran-supreme-leader-ayatollah-ali-khamenei.html

அலுவலகத்தில் பஜனை பாடல்… இணையத்தில் கடும் எதிர்ப்பு!

 

ஹரியானாவின், குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமான பஜனை பாடல் பாடப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துறவிகள் சிலர் பஜனை பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியின்போது காவல்துறை அதிகாரிகள் சிலர் துறவிகளின் பஜனையை கைத்தட்டி ரசித்து பார்த்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த காணொலி வைரலானதை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹரியானாவில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 3-ஆவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக அனைத்து துறைகளையும் காவிமயமாக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஒருவர், “அவசர தேவைக்கு நாங்கள் 100க்கு அழைத்தால் போலீசார் பஜனை பாடலில் பிஸியாக இருப்பார்கள். இப்படி போலீசாருக்கு நிகழ்ச்சி நடத்துவது அறிவியலுக்கு எதிரானது. மூட நம்பிக்கையை அதிகரிக்கும் செயல்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.



source https://news7tamil.live/haryana-bhajani-song-in-the-commissioners-office-strong-protest-on-the-internet.html

மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது? தொகுதி மறுவரையறை, பெண்களுக்கு நாடாளுமன்ற ஒதுக்கீடு விவரம்

 

delimitation exp

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக சண்டிகரில் வீடற்ற மக்களை கணக்கெடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகள். (Express Photo)

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த உடனேயே தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இருப்பினும், 2026 அல்லது அதற்கு முன்னர் முடிக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, உடனடியாக தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை அனுமதிக்காது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக சண்டிகரில் வீடற்ற மக்களை கணக்கெடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகள். (Express Photo)

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2021-ல் மேற்கொள்ள முடியாத மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசு இறுதியாக தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு பயிற்சி தொடங்கும் என்று வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு முக்கியமான முடிவுகளுடன் - கடந்த ஐந்து பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை நிர்ணயம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல் இணைக்கப்பட்டுள்ளது.

1881-ல் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அதன் பத்தாண்டு காலத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் அட்டவணையைத் தவறவிட்ட முதல் ஆண்டு 2021-ஐக் குறித்தது. ஆனால் 2022-ம் ஆண்டில் தொற்றுநோய் மிக அதிக அளவில் இருந்தது, மேலும் 2023 அல்லது 2024-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்முறையைத் தொடங்குவதற்கு இது உதவும். நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை நிர்ணயம் அல்லது மறுசீரமைப்பு உடனடியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்குவதை வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாகத் தெரிகிறது. இருப்பினும், 2026 அல்லது அதற்கு முன்னர் முடிக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, உடனடி தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை அனுமதிக்காது.

தொகுதி மறுவரையறை நிர்ணயப் பார்வை

ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதி மறுவரையறை நிர்ணயம் என்பது அரசியலமைப்பு ஆணையாகும். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்ய, சமீபத்திய மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளின் தொகுதிகளின் எண்ணிக்கையை இந்த செயல்முறை சரிசெய்கிறது. இருப்பினும், அரசியல் கருத்தொற்றுமை இல்லாததால் 1976 முதல் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை நிர்ணயத்தின் நிலையான தர்க்கத்தைப் பின்பற்றினால், பல்வேறு மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சிப் போக்குகளில் உள்ள பரந்த வேறுபாடு, சில மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைவதைக் காணலாம், மற்ற மாநிலங்களில் அதிகரிப்பைக் காணலாம். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக அவர்களைத் தண்டிப்பதாக இது அமையும் என்று தென் மாநிலங்கள் வாதிட்டன. 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை நிர்ணயப் பணியானது, தற்போதுள்ள தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதே தவிர, தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யவில்லை.

தற்போதைய நிலவரப்படி, தொகுதி மறுவரையறை நிர்ணயம் குறைந்தபட்சம் 2026 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டின் 84 வது அரசியலமைப்புத் திருத்தம் 2026-க்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே அடுத்த தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை நடத்த முடியும் என்று கூறியது. 2023 அல்லது 2024, 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்திருக்க முடியும். இரண்டு வருடங்கள் எடுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு தொடங்கினால், கோட்பாட்டளவில் அதன்பிறகு உடனடியாக தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்யப்படலாம்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை

மக்கள்தொகை கணக்கெடுப்பு முதன்முதலில் நடத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல் வருடத்திலும் நடந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசியலமைப்பு ஆணை உள்ளது - இது யூனியன் பாடங்களின் பட்டியலில் உருப்படி 69 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இந்த நடைமுறையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தொகுதிகள் மறுசீரமைப்பின் பின்னணியில் இந்திய அரசியலமைப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய குறிப்புகள் மீண்டும் மீண்டும் உள்ளன. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும், அல்லது இந்த நடைமுறையின் இடைவெளி என்னவாக இருக்க வேண்டும் என்று அது கூறவில்லை. 1948-ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது, மேலும், அதன் நேரத்தையோ அல்லது குறிப்பிட்ட கால அளவையோ குறிப்பிடவில்லை.

எனவே, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அரசியலமைப்பு அல்லது சட்டரீதியான தேவை இல்லை. இருப்பினும், பிரிட்டிஷ் நிர்வாகம் ஒவ்வொரு பத்தாண்டின் முதல் வருடத்திலும் இதை நடத்தியது, சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நடைமுறை பராமரிக்கப்பட்டது. பெரும்பாலான பிற நாடுகளும் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக இதே சுழற்சியைப் பின்பற்றுகின்றன. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்கின்றன.

தொகுதி மறுவரையறை நிர்ணயத்திற்கான அட்டவணை

இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இரண்டு-படி செயல்முறையாகும், இதில் வீடு-பட்டியலிடுதல் மற்றும் எண்ணிடுதல் நடைமுறையும், அதைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பும் அடங்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டுக்கு முந்தைய ஆண்டில், பொதுவாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வீடு-பட்டியலிடுதல் மற்றும் எண்ணிடுதல் ஆகியவை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யும் நடவடிக்கை அந்த ஆண்டில் பிப்ரவரி இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களுக்கு இடையில் நடக்கும்.

வெளிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டில் மார்ச் 1-ம் தேதி நள்ளிரவில் உள்ள இந்திய மக்கள்தொகையைக் குறிக்கின்றன. பிப்ரவரி மாதக் கணக்கெடுப்பின் போது பிறப்பு மற்றும் இறப்புகளைக் கணக்கிட, கணக்கெடுப்பாளர்கள் மார்ச் முதல் வாரத்தில் வீடுகளுக்குத் திரும்பி திருத்தங்களைச் செய்கிறார்கள். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஆரம்ப முடிவுகள், குறிப்பாக மக்கள் தொகை, ஒரு சில மாதங்களுக்குள் வெளியிடப்படும், பொதுவாக அதே ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. முழுமையான முடிவுகள் வெளிவர ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

சுவாரஸ்யமாக, 2025-ல் தொடங்கி 2026-ல் நிறைவடையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடி தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை செயல்படுத்தாது. "2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட" முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளில் மட்டுமே தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்ய முடியும் என்று 84வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மொழி கூறுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் பகுதி 2026க்குப் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இது அறிவுறுத்துகிறது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் என்றால், 2029 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, தொகுதி மறுவரையறை நிர்ணய செயல்முறையை அரசாங்கம் தொடங்க விரும்பினால், தற்போதுள்ள விதியில் திருத்தம் தேவைப்படலாம்.

இருப்பினும், தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் சிக்கல்களில் அரசியலமைப்புத் தேவைகள் மிகக் குறைவானதாக இருக்கும். தொகுதி மறுவரையறை நிர்ணயம் இடைநிறுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக இன்றுவரை தொடர்கிறது. தென் மாநிலங்கள், தற்போதைய மக்கள்தொகையைக் கணக்கிட்டால், நாடாளுமன்றத்தில் தங்கள் இடங்களைக் குறைக்கும், அவை வேறு வழியில் ஈடுசெய்யப்படாவிட்டால், தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை மீண்டும் ஒத்திவைக்க விரும்பலாம்.

16வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகள் இங்கு முக்கியமானதாக இருக்கலாம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதிக் குழுவானது, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளிக்க பரிந்துரைக்கிறது. 16வது நிதிக் கமிஷன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 128வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு கடந்த ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், எல்லை நிர்ணயப் பணியைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளின் இடங்கள் மாற்றியமைக்கப்பட்ட பின்னரே இது நடைமுறைக்கு வரும்.

சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை

சமீப வருடங்களாக சில அரசியல் கட்சிகளால் கோரப்பட்டு வரும் தனி ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவையை நீக்கும் வகையில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி தரவுகளும் சேகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி தரவு சேகரிப்பு முன்னெப்போதும் இல்லாததாக இருக்காது. 1941-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை சாதி தொடர்பான சில தகவல்கள் பெறப்பட்டு, சுதந்திர இந்தியாவில் மட்டும் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. சில முந்தைய ஆண்டுகளில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களின் சாதி அல்லது பிரிவு பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. மற்ற ஆண்டுகளில், இந்துக்களின் சாதி விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.

1951-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது, அதன்பின்னர், பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினர் பற்றிய தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு வருகின்றன.


source https://tamil.indianexpress.com/explained/census-caste-survey-delimitation-constitution-women-reservation-parliament-7372764

செவ்வாய், 29 அக்டோபர், 2024

4 மாதங்களில் ரூ. 120 கோடியை இழந்த இந்தியர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் 'டிஜிட்டல் கைது' மோசடி

 Digital arrest

சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் மோசடி குற்றங்களில், டிஜிட்டல் கைது விவகாரத்தில் 4 மாதங்களில் சுமார் ரூ. 120 கோடியை இந்தியர்கள் இழந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மத்திய அளவில் சைபர் குற்றங்களை கண்காணித்து வரும் உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, சைபர் குற்றங்களில் டிஜிட்டல் கைது மோசடி தற்போது பிரதானமாக மாறி வருவதாக கூறியுள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பதிவான சைபர் குற்றங்களில் 46 சதவீதம் இந்த நாடுகளில் இருந்து உருவானது எனவும், இதில் சுமார் ரூ. 1,776 கோடி வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சைபர் குற்றங்கள் ரிப்போர்டிங் போர்டல் தரவுகளின் படி, கடந்த  ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 31-ஆம் தேதி வரை 7.4 லட்ச புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2023-ஆம் ஆண்டில் 15.56 லட்ச புகார்களும், 2022-ஆம் ஆண்டில் 9.66 லட்ச புகார்களும், அதற்கு முந்தைய ஆண்டில் 4.52 லட்ச புகார்களும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்கு பிரிவுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதன்படி, டிஜிட்டல் கைது, வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி மற்றும் டேட்டிங் ஆப்-கள் மூலமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டிஜிட்டல் கைது மோசடியில் ரூ. 120.30 கோடியும், வர்த்தக மோசடியில் ரூ. 1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ. 222.58 கோடியும், டேட்டிங் ஆப் மூலம் நடந்த மோசடியில் ரூ. 13.23 கோடியும் இந்தியர்கள் இழந்துள்ளதாக சைபர் குற்றங்கள் கண்காணிப்பு துறை தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் கைது மோசடியை பொறுத்தவரை, குறிப்பிட்ட நபரை அழைத்து அவர்கள் கடத்தல் பொருள்கள், போதைப் பொருள்கள், போலி பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவற்றை பார்சல்களாக அனுப்பியதாகவோ அல்லது பெற்றதாக மோசடி கும்பல் கூறுவார்கள்.

சில நேரங்களில் அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உள்ளிட்டோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிப்பார்கள்.

மோசடிக் கும்பல் தாங்கள் குறிவைத்துள்ள நபர்களை ஸ்கைப் அல்லது ஏதேனும் வீடியோ கால் வசதி மூலம் தொடர்பு கொண்டு, தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் போன்றோ அல்லது காவல்துறையினர் போன்று சித்தரித்து, சம்பந்தப்பட்ட வழக்கை தீர்க்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டல் விடுப்பார்கள்.

இந்த வகையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளாக்கபடுகிறார்கள். அதாவது மோசடிக்காரர்கள் கேட்ட பணத்தை கொடுக்கும் வரை வீடியோ காலில் அவர்கள் கட்டாயம் இருக்க வேண்டுமென நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்த மோசடி கும்பல், சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றும் வேலையையும் அரங்கேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/india/indians-lost-rs-120-crore-in-digital-arrest-frauds-in-january-april-2024-7367721

100 நாள் வேலைத் திட்டம்... வெளியான முக்கிய அறிவிப்பு

 மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் சேர்க்கை குறைக்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய நிதியாண்டு நிறைவு பெறாத நிலையில், தேவை சார்ந்த திட்டத்தில் பணியாளர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிப்டெக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 84.8 லட்சம் தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 45.4 லட்சம் தொழிலாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பது தேவை சார்ந்து இயங்கக் கூடியதாக இருப்பதாலும், தற்போதைய நிதியாண்டு இன்னும் நிறைவு பெறாததாலும், பணியாளர்கள் சேர்ப்பதறாகான இலக்கை நிர்ணயிக்க முடியாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மாநிலம் ரீதியாக தேவைக்கேற்ப தொழிலாளர்களின் நிதிநிலையை திருத்தம் செய்து முன்மொழியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-07-ஆம் நிதியாண்டு முதல் 2013-14-ஆம் நிதியாண்டு வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்த தொழிலாளா்கள் சோ்ப்பு மற்றும் வேலை தினங்களின் கூட்டு எண்ணிக்கை ரூ. 1,660 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2024-25-ஆம் நிதியாண்டு வரை இதன் எண்ணிக்கை ரூ. 2,923 கோடியாகும்.

இந்த திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட தினங்கள், கடந்தாண்டில் 184 கோடியில் இருந்து 154 கோடியாக குறைந்துள்ளதாகவும். மொத்தமுள்ள தொழிலாளா்களில் 6.7 கோடி போ் ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனை முறையின் கீழ் ஊதியம் பெற தகுதியற்றவா்களாக உள்ளனா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் 26, 2024 வரை 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் 13.1 கோடி தொழிலாளா்களின் ஆதாா் எண்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றும் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கையில் 99.3 சதவீதமாகும். எனவே, ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனை முறையின் கீழ் இணையாத தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் இணைக்கப்படாத தொழிலாளா்களையும் விரைவில் அதில் சோ்க்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அட்டைகள் நீக்கம் மற்றும் ரத்து என்பது இந்த திட்டத்தில் தொடரும் ஒரு நடைமுறையாகும். ஆதாா் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடைமுறையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்கின்றன. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 1.02 கோடி அட்டைகளும் 2024-25 நிதியாண்டில் அக்டோபா் 26-ஆம் தேதி வரை 32.28 லட்ச அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.86,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் ஒதுக்கப்பட்ட அதிக நிதியாகும். அதேபோல், தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமும் 7 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 


source https://tamil.indianexpress.com/india/mgnregs-demand-driven-not-possible-to-fix-enrolment-targets-govt-7368497

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்... மீண்டும் பங்கேற்பு

 

Owaisi 1

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர்களில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தேசிய தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியும் இருந்தார். (Express Photo)

வக்ஃப் (திருத்தம்) மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை மீண்டும் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். “வக்ஃப் திருத்த மசோதாவில் எந்த பங்கும் இல்லாதவர்கள் குழுவால் வாய்மொழிவழி ஆதாரத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினர்.

திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர்களில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐஎம்.ஐ.எம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஜாவேத் மற்றும் சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி) உறுப்பினர் மொஹிப்புல்லா நத்வி ஆகியோர் அடங்குவர். இருப்பினும், சிறிது நேரம் விலகி இருந்த அவர்கள் பின்னர் மீண்டும் கூட்டத்தில் இணைந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி வக்ஃப் வாரிய நிர்வாகி, குழுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது டெல்லி அரசின் அனுமதி பெறாமல் நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் நாடாளுமன்றக் குழு தலைவர் ஜகதாம்பிகா பாலிடம், டெல்லிஅரசின் ஒப்புதலைப் பெறாமல் அந்த அதிகாரி குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்ததாகவும், அதை "பூஜ்ய மற்றும் செல்லாததாக" கருத வேண்டும் என்றும் ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

பாஜக உறுப்பினரும் முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாயுடனான சூடான விவாதத்தின் போது கண்ணாடி பாட்டிலை உடைத்ததற்காக திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்சி) எம்.பி கல்யாண் பானர்ஜி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் குழுவிலிருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர்,  நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பா.ஜ.க எம்.பி பால், பின்னர், பானர்ஜி பாட்டிலால் "நாற்காலியை அடிக்க" முயன்றதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பா.ஜக உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினர். திங்கட்கிழமை சந்திப்பின் போது பானர்ஜி இல்லை என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரியவந்தது. 

திங்கள்கிழமை நடந்த குழு கூட்டத்தில் டெல்லி வக்பு வாரியம், ஹரியானா வக்பு வாரியம், பஞ்சாப் வக்பு வாரியம் மற்றும் உத்தரகாண்ட் வக்பு வாரியம் ஆகியவற்றின் வாய்மொழி ஆதாரங்கள் அடங்கியிருந்தன. நாளின் இரண்டாம் பாதியில், குழுவானது, முன்னாள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவான ‘கால் ஃபார் ஜஸ்டிஸ்’ மற்றும் வக்ஃப் குத்தகைதாரர் நல சங்கம், டெல்லி ஆகியவற்றிலிருந்து வாய்மொழி ஆதாரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டது.

வக்ஃப் குழு கூட்டத்தில் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அக்டோபர் 14 அன்று, கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் அதிகாரியும், பாஜக தலைவருமான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மீது வக்ஃப் நிலம் ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவித்ததை அடுத்து, பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


source https://tamil.indianexpress.com/india/waqf-amendment-bill-opposition-members-walk-out-of-parliamentary-panel-meeting-rejoin-later-7368381

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு... விரைவில் தொகுதி மறுவரையறை; புதிய இடங்களுடன் லோக்சபா தேர்தல் - மத்திய அரசு திட்டம்!

 

census 1

மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தொகுதிகளை மறுவடிவமைப்பதற்காக மறுவரையறை நிர்ணயத்தை அரசு முன்னெடுக்கும். (Express file photo)

மிகவும் தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்தவும், 2026-ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறையை முடிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது.  வட்டாரங்கள் கூறுகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்குமா என்பது குறித்த பரிந்துரைகள் எடுக்கப்படுகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தொகுதிகளை மறுவடிவமைப்பதற்காக, தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை அரசு மேற்கொள்ளும். இதைத் தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு நடைமுறைகளும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.

2002-ம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய என்.டி.ஏ அரசாங்கம் 84-வது திருத்தத்தின் மூலம் தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை 25 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இது 2026-ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பின்னரே" மேற்கொள்ளப்படும் என்று கூறியது. இதன் பொருள் தொகுதி மறுவரையறை நிர்ணயம் 2031 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்படும். இருப்பினும், வட்டாரங்கள் கூறுகையில், தொகுதி மறுவரையறை நிர்ணய செயல்முறையை 2027-க்குள் தொடங்கி ஒரு வருடத்திற்குள் முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இதனால், அடுத்த மக்களவைத் தேர்தலை (2029-ல்) எல்லை நிர்ணயத்திற்குப் பிறகும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்ட பிறகும் செய்ய முடியும்.

சமீபத்தில், இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக மிருத்யுஞ்ஜெய் குமார் நாராயணின் பதவிக்காலம் இந்த டிசம்பரைத் தாண்டி ஆகஸ்ட் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தாலும் - காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் ஜே.டி (யு), லோக் ஜனசக்தி கட்சி மற்றும் அப்னா தளம் போன்ற சில ஆளும் என்.டி.ஏ. அதற்கான சூத்திரத்தை இறுதி செய்ய வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ.க-வின் சித்தாந்த தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு யோசனையை ஆதரித்துள்ளது, சரியான எண்ணிக்கையைப் பெறுவது நன்கு நிறுவப்பட்ட நடைமுறையாகும் என்று கூறியது.

ஆனால், அதை எப்படிச் செய்வது என்பது குறித்த தெளிவு இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. “தற்போதுள்ள பட்டியல் சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் மதத்தின் எண்ணிக்கையில் ஓ.பி.சி பிரிவைச் சேர்ப்பது மற்றும் பொது மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்குள் உள்ள துணைப்பிரிவுகளின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பரிந்துரைகள் உள்ளன.

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் காரணமாக வடக்கில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் அதன் அரசியல் பங்கின் தாக்கம் குறித்து தென் மாநிலங்கள் கவலைப்படுவதால், தொகுதி மறுவரையறை நிர்ணயம் அதன் சொந்த பிரச்சனைகளைக் கொண்டிருக்கும். தெற்கில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் இந்த கவலையை பகிரங்கமாக எழுப்பியுள்ளன, ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், பா.ஜ.க-வின் முக்கிய கூட்டணி கட்சியுமான தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி)-யின் தலைவரும், வயதான மக்கள்தொகையின் விளைவுகளை ஈடுசெய்ய அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாநிலத்தில் உள்ள மக்களை ஊக்குவிக்கின்றனர்.

அரசு வட்டாரங்கள் இந்த கவலையை அறிந்திருப்பதாகவும், "மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் பிற சமூக முன்னேற்றங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" கண்ட தென் மாநிலங்களை "பாதிக்கக்கூடிய" எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளன.

இது குறித்து மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை நிர்ணய செயல்முறை வடக்கு மற்றும் தெற்கு இடையே எந்த பிரிவினையையும் ஏற்படுத்தக் கூடாது என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள்தொகை - பகுதி சூத்திரங்களை நன்றாகச் சரிசெய்வது அல்லது மாற்றுவது உதவக்கூடும். அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒருமித்த கருத்து வெளிவரும்” என்றார்.

தொகுதி மறுவரையறை எல்லை நிர்ணய செயல்முறைக்கு தேவையான திருத்தங்களில், பிரிவு 81 (இது மக்களவையின் அமைப்பை வரையறுக்கிறது), பிரிவு 170 (சட்டமன்றங்களின் அமைப்பு), பிரிவு 82, பிரிவு 55 (ஒவ்வொரு வாக்கின் மதிப்புக்கான குடியரசுத் தலைவர் தேர்தல் செயல்முறையைப் பற்றியது. தேர்தல் நடவடிககி மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது), பிரிவுகள் 330 மற்றும் 332 (முறையே மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கான இட ஒதுக்கீட்டை உள்ளடக்கியது).


source https://tamil.indianexpress.com/india/census-next-year-caste-enumeration-delimitation-govt-lok-sabha-polls-7368650

'இன்னொரு படப்பிடிப்பு; பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா?:

 

 Thirumavalavan on Tamilaga Vettri Kazhagam conference and Vijay speech Tamil News

த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டைக் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்கள் மத்தியில் பேசிய தலைவர் விஜய், "பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம். 

இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாக யார் அரசியலுக்கு வந்தாலும், ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி, பூச்சாண்டி காட்டி, மக்களை ஏமாற்றி, இவர்கள் மட்டும் மறைமுகமாக டீலிங் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் பாசிசம் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை பயத்தை காட்டி ஒரு சீன் போடுவதே வேலையாக போய்விட்டது. நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?. நீங்களும், அவர்களுக்கு சரிசமம் தான். மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள்" என்று அவர் கூறினார்.

திருமா விமர்சனம் 

இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். த.வெ.க மாநாடு குறித்து குறிப்பிட்டுள்ள திருமாவளவன், 'இன்னொரு படப்பிடிப்பு' என்றும், 'அ.தி.மு.க-வை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பாசிச எதிர்ப்பை விஜய் நையாண்டி செய்வதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "முதல் அடி மாநாடு, அடுத்த அடி ஆட்சிப் பீடம்' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.

திரையுலகத்தில் பெற்றுள்ள புகழ், செல்வாக்கு, அரசியல் உலகத்திற்கு வரும்போது பரிமாற்றம் பெறும் என சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சூழலில் அது வாய்ப்பில்லை. ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அரசியலில் வேகமாக இலக்கை அடையலாம், ஆனால் படிப்படியாகத்தான் உயர முடியும்.

பாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ "அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயசமா " என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்துவதாலும்; "பிளவுவாதத்தை எதிர்ப்போம்" என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது.

தவெக கொள்கையில் ஆக்கப்பூர்வமான, புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ, புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக்கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.

பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனைபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி விஜய்யிடம் வெளிப்பட்டுள்ளது. ஆபர்என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத்தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம்.

'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான 'பிளவுவாதத்தை' ஏற்பதில்லை என்ற விஜய் கூறுகிறார். சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் மதவழி சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா?. திமுகவை முதல் எதிரி என்று கூறியிருப்பதும், திமுக கூட்டணியை குறிவைத்திருப்பது தான் விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாராம்சமாக உள்ளது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முடியுமா என்று தூண்டிலை போட்டுள்ளதாக பலரும் அலசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியை பொறுத்தவரையில் வலுவாக இருக்கிறது; வலுவாக தொடரும். " என்று அவர் கூறியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-on-tamilaga-vettri-kazhagam-conference-and-vijay-speech-tamil-news-7369908

திங்கள், 28 அக்டோபர், 2024

வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!

 

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன பண மோசடி நிறுவனங்களுக்கு தெலங்கானா இளைஞர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலுமுலா பிரவீன் குமார்(33), செட்லபெல்லி மகேஷ்(29), கண்ட்லா அனில் குமார்(27), அய்யோரி மோகன்(21) ஆகிய 4 பேருக்கும் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கணினி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் பணம் பெற்றுள்ளார்.

கடந்த செப். 30 ஆம் தேதி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், சீன பணமோசடி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்களில் ஈடுபட காட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வார கால போராட்டத்திற்குப் பின்னர் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் அக்.7 ஆம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பிய இளைஞர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர் பணம் தர மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஜக்தியால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்தனர். ‘அந்த நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் பெண்களின் பெயரில் போலிக் கணக்குளை உருவாக்கி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் பேசி, அவர்களை நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்க எங்களை பயன்படுத்தினர். இதன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்குகள், காப்பீட்டு விவரங்கள், பங்குகள் பற்றி தெரிந்துகொண்டு, பின்னர் அவர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை எடுத்துவிடுகின்றனர்’ என்று இளைஞர்கள் கூறினர்.

டேட்டா என்ட்ரி வேலை வாங்கித் தருவதாகக் கூறி சைபர் குற்றங்களில் ஈடுபட வைத்ததாக அனில் குமார் கூறியுள்ளார். மாற்றுத் திறனாளியான அய்யோரி மோகன், ‘எனக்கு பிட்காயின் விற்பனையுடன் தொடர்புடைய வேலை என்று கூறி அழைத்துச் சென்றனர். முதலில் என்னுடைய தட்டச்சு வேகத்தைப் பார்த்து என்னை நிராகரித்தனர். பின்னர் என்னை வேலையில் ஏற்றுக்கொண்ட நிலையில், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய வைத்தனர். அவ்வாறு செய்யவில்லை என்றால் அபராதம் விதித்தனர், சில நேரங்களில் அடிக்கவும் செய்தனர். தனிப்பட்ட செல்போனைக் கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை, நிறுவனம் வழங்கிய செல்போனில் மட்டுமே பேசமுடியும்’ என்றார்.

ஒப்பந்தங்களில் கையெழுத்திட, போலி அடையாள அட்டைகளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் உணவு, இருப்பிடம் இன்றி வேலை வாங்கியதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இளைஞர்கள் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சட்டைப்பையில் தனது செல்போனை மறைத்து வைத்து, அந்த நிறுவனங்களில் காவல்துறை சோதனை செய்ததை ரகசியமாக பதிவு செய்ததாக தெலங்கானா போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் மட்டுமின்றி இந்தியாவில் பல இளைஞர்கள் இதுபோன்ற சூழல்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளைஞர் இதுகுறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/young-people-are-sold-to-chinese-fraud-companies-claiming-to-work-abroad.html

C Team தான்

 

"BJP's C Team is Tamil Nadu's Victory League" - Minister Raghupathi interview!

பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம் எனவும், நேற்று நடந்தது மாநாடு அல்ல, ஒரு மிகப் பிரமாண்டமான சினிமா ஷூட்டிங் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

“விஜய் தனது கட்சியை A டீம், B டீம் என சொல்வார்கள் என கூறினாலும், அவர் பாஜகவில் C டீம் தான். திராவிட மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எங்களது கொள்கைகளுக்கு தவெக மாநாட்டில் விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்லும் கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியில் இருந்து யாரும் பிரித்து விட முடியாது. நேற்று மாநாடு நடைபெற்றது என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் நடந்தது என்றே சொல்லலாம்.

தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் ஆட்சிக்கு வரட்டும், அதன் பின்பு கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றி பார்க்கலாம். திமுகவின் கூட்டணியை யாரும் உடைத்து விட முடியாது. முதலமைச்சரின் பாசத்தால் கூட்டணி தலைவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். ஆகவே எங்களை விட்டு யாரும் போக மாட்டார்கள். அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றி பேசவில்லை. பாஜகவிற்கு வலுவூட்ட வேண்டும் என்பதற்காகவும், அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதிமுக குறித்து விஜய் பேசவில்லை.

ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011 – 21-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி தான் பேச வேண்டும். 2021 – 26 இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. யாராலும் பேச முடியாது. நாங்கள் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை. திமுகவை தாக்கி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஏதாவது பேச முடியும். அதனால் பேசுகின்றனர். திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வந்தவர்கள் முழுக்க முழுக்க இளைஞர்கள் தான். 1500 மீட்டர் 1000 அடி நீளம் என்ற அளவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் அமைத்திருந்தோம். விஜய்யின் மாநாட்டு கூட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டி இருந்தோம். இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் உள்ளது.

தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாடு Show-வை நடத்தியுள்ளனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்ற முடியாத ஒரு சொல். அந்த சொல் வரும் போது அதன் பின்பு எந்த சொல் வந்தாலும் பிரச்னை இல்லை. திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. சிறுபான்மையினர் நலனுக்கு இந்தியாவிலேயே பல்வேறு வகையில் அதிகமாக பாடுபட்டு பாதுகாக்கும் இயக்கம் திமுக தான். அதனால் என்னென்ன பாதிப்புகளை சந்தித்துள்ளோம் என்பது நாடறியும்.

ஒரு முறைக்கு இருமுறை கொள்கைக்காக ஆட்சி இழந்த கட்சி திமுக. ஆளுநரை பற்றி எதிர்த்து பேசினால் தான் அது எடுபடும், தமிழ்நாடு மக்களின் விரோதத்தை சம்பாதித்து வரும் ஆளுநரை வரவேற்று பேசினால் கெட்ட பெயர்தான் வரும் என்பதால் ஆளுநர் குறித்து விஜய் பேசியுள்ளார்” இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.


source https://news7tamil.live/bjps-c-team-is-tamil-nadus-victory-league-minister-raghupathi-interview.html