திங்கள், 28 அக்டோபர், 2024

C Team தான்

 

"BJP's C Team is Tamil Nadu's Victory League" - Minister Raghupathi interview!

பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம் எனவும், நேற்று நடந்தது மாநாடு அல்ல, ஒரு மிகப் பிரமாண்டமான சினிமா ஷூட்டிங் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

“விஜய் தனது கட்சியை A டீம், B டீம் என சொல்வார்கள் என கூறினாலும், அவர் பாஜகவில் C டீம் தான். திராவிட மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எங்களது கொள்கைகளுக்கு தவெக மாநாட்டில் விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்லும் கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியில் இருந்து யாரும் பிரித்து விட முடியாது. நேற்று மாநாடு நடைபெற்றது என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் நடந்தது என்றே சொல்லலாம்.

தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் ஆட்சிக்கு வரட்டும், அதன் பின்பு கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றி பார்க்கலாம். திமுகவின் கூட்டணியை யாரும் உடைத்து விட முடியாது. முதலமைச்சரின் பாசத்தால் கூட்டணி தலைவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். ஆகவே எங்களை விட்டு யாரும் போக மாட்டார்கள். அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றி பேசவில்லை. பாஜகவிற்கு வலுவூட்ட வேண்டும் என்பதற்காகவும், அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதிமுக குறித்து விஜய் பேசவில்லை.

ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011 – 21-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி தான் பேச வேண்டும். 2021 – 26 இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. யாராலும் பேச முடியாது. நாங்கள் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை. திமுகவை தாக்கி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஏதாவது பேச முடியும். அதனால் பேசுகின்றனர். திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வந்தவர்கள் முழுக்க முழுக்க இளைஞர்கள் தான். 1500 மீட்டர் 1000 அடி நீளம் என்ற அளவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் அமைத்திருந்தோம். விஜய்யின் மாநாட்டு கூட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டி இருந்தோம். இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் உள்ளது.

தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாடு Show-வை நடத்தியுள்ளனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்ற முடியாத ஒரு சொல். அந்த சொல் வரும் போது அதன் பின்பு எந்த சொல் வந்தாலும் பிரச்னை இல்லை. திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. சிறுபான்மையினர் நலனுக்கு இந்தியாவிலேயே பல்வேறு வகையில் அதிகமாக பாடுபட்டு பாதுகாக்கும் இயக்கம் திமுக தான். அதனால் என்னென்ன பாதிப்புகளை சந்தித்துள்ளோம் என்பது நாடறியும்.

ஒரு முறைக்கு இருமுறை கொள்கைக்காக ஆட்சி இழந்த கட்சி திமுக. ஆளுநரை பற்றி எதிர்த்து பேசினால் தான் அது எடுபடும், தமிழ்நாடு மக்களின் விரோதத்தை சம்பாதித்து வரும் ஆளுநரை வரவேற்று பேசினால் கெட்ட பெயர்தான் வரும் என்பதால் ஆளுநர் குறித்து விஜய் பேசியுள்ளார்” இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார்.


source https://news7tamil.live/bjps-c-team-is-tamil-nadus-victory-league-minister-raghupathi-interview.html


Related Posts: