ஞாயிறு, 20 அக்டோபர், 2024

அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் இன்று இந்த 6 மாவட்டங்களில் மழை

 20 10 2024


rain arab

மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (அக்.21) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (அக். 20) தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (அக்.21) கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/new-depression-forming-over-arabian-sea-tn-6-districts-likely-to-get-rain-today-7340540

Related Posts: