25 10 24
/indian-express-tamil/media/media_files/zplV48gypCBX5gHDGmob.jpg)
தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பி எம்.எம். அப்துல்லா மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங்கின் இந்தி கடிதத்திற்கு வெள்ளிக்கிழமை தமிழில் பதிலளித்தார்.
அப்துல்லா தனது X பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், "மத்திய இணை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. எனக்கு தெரியாது என அமைச்சரின் அலுவலக அதிகாரிகளுக்கு பலமுறை கூறியுள்ளேன். ஆங்கிலத்தில் கடிதம் அனுப்ப கூறியுள்ளேன்.
ஆனாலும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. கடிதத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தற்போது அவர்களுக்குப் புரியும் படி பதில் அளித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். அப்துல்லா தமிழில் தான் கைப்பட எழுதிய கடிதத்தை பதில் கடிதமாக அனுப்பியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mm-abdulla-replies-to-ministers-hindi-letter-in-tamil-7363182