வெள்ளி, 18 அக்டோபர், 2024

டி.வி நிகழ்ச்சி மூலம் இந்தி திணிப்பு: கவர்னருக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

 TN Congress leader Selvaperunthagai condemns  Governor RN Ravi imposing Hindi via DD Tamil TV Tamil News

டி,டி தமிழ் நிகழ்ச்சியில் இந்தி மாதம் கொண்டாட்டங்கள் நடந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களை ஒட்டி ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்  எனக் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டி.டி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், டி.டி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது. இந்த சூழலில், தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதால் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டி,டி தமிழ் நிகழ்ச்சியில் இந்தி மாதம் கொண்டாட்டங்கள் நடந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-congress-leader-selvaperunthagai-condemns-governor-rn-ravi-imposing-hindi-via-dd-tamil-tv-tamil-news-7335181

Related Posts:

  • முஸ்லீம்கள் தீவிரவாதிகளே இல்லை .. ! முஸ்லீம்கள் தீவிரவாதிகளே இல்லை .. ! கிறுஸ்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில்கொண்டுவந்தாச்சு .. இந்துத்துவாவை அழித்தாச்சு .. இஸ்லாமியர்களை அழிக்க எலுமி… Read More
  • முஸ்லிம்களை கொலை செய்வது எப்படி ? – பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கு RSS ஊடகங்களில் தான் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ் எத்தனிக்கதென்றால் சிறுவர்களின் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் விதமாக ம… Read More
  • எங்கே சென்றார்கள் இவர்கள் ??? கேரளாவில் தலித் சமூகத்தை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி கற்பழித்து கொடுர கொலை. எங்கே சென்றார்கள் இவர்கள் ??? தலித் சமூகத்திற்காக போராடும் தலித் அமைப்ப… Read More
  • சாதிக்கும் நாகர்கோவில் மாணவி 14 கண்டுபிடிப்புகள்; 5 தேசிய விருதுகள்; 1 சர்வதேச விருது; அப்துல் கலாம் அவர்களால் பாராட்டு பெற்றவர்; சாதிக்கும் நாகர்கோவில் மாணவி மாஷா ந… Read More
  • முதலீடு இல்லாத தொழில் என்றவுடன் நிறைய பேர் ஆர்வமுடன் வருகின்றனர். தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவரின் மனதிலும் இருக்கிறது. சந்தோசம், சரி வாருங்க… Read More