20 10 2024 வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! -வானிலை ஆய்வு மையம் தகவல்…
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அக்டோபர் 23ஆம் தேதிக்குள் ஒரு சூறாவளி புயல் (‘டானா’ என்று பெயரிடப்படும்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5:30 மணி அளவில் உருவாகியுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. தொடர்ந்து மத்திய கிழக்கு வங்க கடலில், நாளை மறுநாள் புயலாக வலுவடைய உள்ளது. இதற்கு கத்தார் நாடு அறிவுறுத்திய “டானா” புயல் என பெயர் வைக்கப்பட உள்ளது. அதன்பின் வடமேற்கு நோக்கி நகர்ந்து 24 ஆம் தேதி காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal.html