வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஊரகப் பகுதிகளில் 68,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

 Two Tamil Nadu cadre IAS officers transferred to centre, Krishnan IAS, Neeraj Mittal IAS, தமிழக பிரிவு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம், கிருஷ்ணன் ஐஏஎஸ், நீரஜ் மிட்டல் ஐஏஎஸ், Two Tamil Nadu cadre IAS officers transferred to central govt, who are they

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ், 2024-25-ம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவும் அல்லது வாங்கவும் பலன் பெறுவார்கள். 

ஒன்றிய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024-24 நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60% நிதியும் மாநில அரசு 40% நிதியும் வழங்குகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ. 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ. 83 கோடி என மொத்தம் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

2024 – 2025ம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-go-finance-allotment-for-rural-area-house-building-7335455