திங்கள், 21 அக்டோபர், 2024

வளர்ந்து வரும் நாடு இந்தியா... 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி திட்டம் நிறைவேற்றும் மத்திய அரசு - நாராயணசாமி விமர்சனம்

 

Narayanasamy

இந்தியா வளர்ந்து வரும் நாடு என சொல்லிவிட்டு 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இந்தியா வளர்ந்து வரும் நாடு என சொல்லி விட்டு 80கோடி மக்களுக்கு தலா கிலோ இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். நாடு வளர்ந்து வரும் என்றால், இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அவசியமில்லை. 80 கோடி பேருக்கு இலவச அரிசி தருவதற்கு மோடி இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளார். பட்டினியால் வாடும் நாடுகள் 112-ல் இந்தியா 105-ல் உள்ளது. 

இதற்கான ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் 27.3 சதவீதம் பேர் ஏழைகள். காங்
கிரஸ் ஆட்சியில் 19 சதவீதமாக இருந்த சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொருளாதார வீக்கம்.

தமிழக ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் திராவிட வார்த்தை நீக்கப்பட்டு ஒலிபரப்பனாது. இது கொடுமை.
ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை முன்வைத்து தமிழர்களை அவமதித்து தமிழக அரசுக்கு தினமும் தொல்லை தருகிறார். 

ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.  மத்திய அரசு கைப் பாவையாக இருந்து பிரதமருக்கு சேவகம் செய்கிறாரே தவிர தமிழக வளர்ச்சிக்கோ, மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை. பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அதனால் ஆளுநர் ரவியை திரும்பப் பெறவேண்டும்.

புதுச்சேரி அரசு அறிவிப்பு அரசாகதான் உள்ளது, அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, 10ஆண்டு பணிபுரிந்தோர் பணி நிரந்தரம் உள்பட ஏதும் நிறைவேற்றாமல் அறிவிப்பாக உள்ளது.

கோவில் நிலங்கள் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படுகிறது. காரைக்கால் கோவில் - விவகாரத்தில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டவர் வெளியில் தான் இருக்கிறார். கோவில் நிலத்தை பட்டா மாற்றி விற்பது சகஜமாகிவிட்டது. காமாட்சியம்மன் கோவில் சொத்தை அபகரித்தோர் மீது விசாரணை நடக்கவில்லை. எதை பற்றியும் முதல்வரும், அமைச்சர்களும் கவலைப்படவில்லை. இவர்களை வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் 6 புகார்களை குடியரசுத்தலைவரை சந்தித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் தருவோம். 

சி.பி.ஐக்கு இப்புகாரை நேரடியாக அனுப்ப இயலாது. ரேஷன் கடை திறப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி. இது மக்கள் கோரிக்கை, தொடர்ந்து செய்யவேண்டும், அறிவித்தப்படி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு ஆகியவற்றையும் தரவேண்டும்.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப் ரேட்டராக ரவிக்குமார் பணி புரிந்து வருகிறார். அவரது வீட்டை சென்னை சி.பி.ஐ. சோதனையிட்டது. அதன்படி தற்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார், அவரது மனைவி பிரியதர்ஷினி, அவரது மாமியார் குமுதம் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இவர்கள் 3 பேர் மீதும் சி.பி.ஐ. குற்றம் ழ்சாட்டியுள்ளது. சி.பி.ஐ. தகவல் அறிக் கையில் அவர் வாங்கிய சொத்துகள் 6 பக்கங்களில் பட்டியலிட்டுள்ளது. 

இந்த மொத்த சொத்தின் மதிப்புரூ. 106 கோடி. இதில் பல வீடுகள், சொத்துகள் ஆகியவை அடங்கும்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இரு முறை அதிகாரிகள் பணம் பதுக்கி வைத்துள்ளதாக சோதனை செய்தனர். அப்போது பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயம் 2-வது சோதனை நடக்கும் போது வாக்குவாதம் செய்தார். தொழிலதிபர் ஒருவரின் பினாமியாக உள்ளார். இது சி.பி.ஐ. கண்டு பிடித்த சொத்துதான். கண்டறியாத பல கோடி சொத்துகள் உள்ளன. இவருக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது.

கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் சம்பளம் என்ன, இவ்வளவு சொத்து வாங்க நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது. யார் பின்னணி. யார் பினாமியாக உள்ளார் என்பதை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கவேண்டும். குறிப்பாக இவரை சி.பி.ஐ. வழக்கில் இருந்து காப்பாற்ற ஒரு அமைச்சர் சென்னையில் தங்கியுள்ளார். 

சி.பி.ஐ. ஆதாரம்சேகரிக்காமல் வழக்கு தாக்கல் செய்யமாட்டார்கள். இவர் சொத்துகளை கடந்த 2009-ல்
இருந்து வாங்கியுள்ளார். சுமார் ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் வங்கிவிட்டு ரூ. 106 கோடிக்கு சொத்தை வருமானத்துக்கு அதிகமாக வாங்கியுள்ளார்.

இந்த கோடிக்கணக்கான சொத்து யாருடைய பணம் என்பதை விசாரிக்கவேண்டும். அவரது டைரியில், 
யார் யாருக்கு பணம் தந்ததாக குறிப்பிட்டு வைத்துள்ளார்.

சி.பி.ஐ. இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. ஆதாரத்துடன் சொல்கிறேன்.  தமிழக பகுதியிலும் இவர் சொத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது வழக்கு தாக்கல் செய்து பாரபட்சமின்றி சி.பி.ஐ செயல்பட வேண்டும். அரசியல் அழுத்தத்துக்கு சி.பி.ஐ. பலிகடா ஆகி
விடக்கூடாது. நடுநிலையுடன் செயல்படவேண்டும். அழுத்தத்துக்கு இடம் தரக்கூடாது.

சம்பந்தப்பட்டோரைக் கைது செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்தும் அரசு ஊழியர் ரவிக்குமார் மீது எவ்வித நடவடிக்கையும் புதுச்சேரி அரசு செய்யவில்லை.

பணியாளர் துறையின் தலைவரான முதல்வர் ரங்கசாமி மவுனம் காக்கிறார்.இவரை காப்பாற்ற நினைக்கிறாரா? ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்தால் அவர் பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்.  விசாரணை செய்ய வேண்டும். 


புதுச்சேரி அரசு பணியாளர் துறை, முதல்வர் ரங்கசாமி இவரை பாதுகாக்க நினைக் கிறாரா என்று விளக்கம் தர வேண்டும்.  சி.பி.ஐ. ஏன் இன்னும் கைது செய்யவில்லை என விளக்கம் தரவேண்டும்.” என்று நாராயசாமி கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/former-puducherry-cm-narayanasamy-india-developing-country-but-centre-implements-free-rice-scheme-for-80-crore-people-7342022