வெள்ளி, 27 டிசம்பர், 2024

குளிரில் நடுங்கி அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்… காசாவில் தொடரும் சோகம்!

 

26 12 24 

காஸாவில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் குளிரால் நடுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது. இஸ்ரேலின் ராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் தகர்க்கப்பட்டதுடன் 45,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் இடமாற்றப்பட்டு காசா கூடார நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காஸாவில் குளிர்காலம் துவங்கியுள்ளதால் முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான குடியிருப்புகளும், சரியான போர்வைகளும் இன்றி குளிரலைகளினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர். காஸாவில் கடந்த 2 நாள்களுக்குள் 3 குழந்தைகள் குளிரில் நடுங்கி உயிரிழந்துள்ளன. காஸாவின் கான் யூனுஸ் நகரின் முவாஸி பகுதியிலுள்ள முகாமின் கூடாரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்த 3 வாரக் குழந்தையான சிலா தான் அந்த 3 குழந்தைகளில் கடைசியாக குளிரினால் உயிரிழந்தது.

இரவு முழுவதும் குளிரினால் அழுதுக்கொண்டே இருந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் போர்வைகளைப் போர்த்தியுள்ளனர். காலை எழுந்து பார்த்தப்போது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. உடனடியாக, அதன் பெற்றோர் அந்த குழந்தையை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கான் யூனுஸ் பகுதியிலுள்ள நாஸர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் அஹமது அல்-ஃபர்ரா கூறுகையில், கடந்த 48 மணிநேரத்தில் குளிரினால் பாதிக்கப்பட்டு சிலா உள்பட, 3 நாள்களே ஆன குழந்தை ஒன்றும், 1 மாதக் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் குளிரினால் ஏற்படும் ஹைப்போதெர்மீயாவினால் பாதிப்பின் காரணமாக உயிரிளந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/children-shivering-in-the-cold-and-died-one-after-another-tragedy-continues-in-gaza.html

Related Posts:

  • கணவனின் திருபொருத்தம் பெறாத பெண்ணின் கப்ரு நிலை என்ன ? மஸ்ஜிதுன் நபவீயில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்ப… Read More
  • Hadis (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "உன் சகோதரன்அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும்அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருக்கும்நிலையிலும் அவனுக்கு உதவி செய்''என்ற… Read More
  • எச்சரிக்கை எச்சரிக்கை...! எச்சரிக்கை எச்சரிக்கை...!+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,அல்லதுஅந்த எண்ணு… Read More
  • குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்...6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாச… Read More
  • இப்படி ஒரு ஊரா...? நம்பவே முடியல...! சிவகங்கை மாவட்டம் 1 புதூர் (இளையான்குடி) என்ற ஊரில் வைக்கப்ட்டுள்ள பாதகையதான் (Bord) நீங்கள் படத்தில் பார்ப்பது. இப்படியும் சில ஊர் க… Read More