இணையத்தில் செவ்வாய் கிரகத்தைப் பற்றி நிறைய தகவல்கள் இருந்தாலும்,
செவ்வாய் கிரகம் பற்றி நீங்கள் இதுவரை அறியாத சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. செவ்வாய் என்பது சூரிய குடும்பத்தில் உள்ள 4-வது கிரகம் ஆகும். நிக்கல், கந்தகம் மற்றும் இரும்பினால் ஆன ஒரு கிரகம். அதன் நிலப்பரப்பு பூமியைப் போல் இருப்பதால் அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை காண அடிக்கடி ஆய்வு செய்யப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது 687 பூமி நாட்கள் ஆகும், இது பூமியில் ஒரு வருடத்தை விட இரண்டு மடங்கு நீளம். இந்த கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க அதிக நேரம் எடுக்கும். சிவப்பு கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடங்கள் ஆகும்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்றும் பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் வைக்கிங் லேண்டர்ஸ் (Viking Landers) ஆகும். இது 1976 இல் கிரகத்தின் மேற்பரப்பைத் தொட்டது.
பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது செவ்வாய் சிவப்பு நிறமாக தெரிகிறது. அதன் மண் மற்றும் பாறையில் அதிக அளவு இரும்பு-ஆக்சைடு அல்லது துரு காரணமாக அந்த நிறத்தைப் பெறுகிறது. கிரகணத்தின் போது கிரகத்தின் நிறம் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறும்.
செவ்வாய் கிரகத்தில் நீர் தற்போது திட வடிவில் மட்டுமே உள்ளது. வளிமண்டல அழுத்தம் காரணமாக இது நிகழ்கிறது.
செவ்வாய் கிரகத்தில் ஃபோபோஸ் மற்றும் டீமோஸ் ஆகிய இரண்டு நிலவுகள் உள்ளன. இரண்டு நிலவுகளும் சிறியதாகும்.
source https://tamil.indianexpress.com/technology/interesting-facts-about-mars-why-it-is-called-red-planet-8546113