திங்கள், 30 டிசம்பர், 2024

யார் அந்த சார்?

 

ADMK pos

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

ஞானசேகரன் செல்போனில் பேசிய போது சார் (sir) என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸார் அது திசை திருப்புவதற்காக சும்மா பயன்படுத்தியுள்ளார் என தெரிவித்தனர். ஆனால் அதிமுக தலைவர்கள் யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

WhatsApp Image 2024-12-30 at 08.07.32

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மாயனூர், புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் நேற்று (டிச. 29ம் தேதி) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)?, ஹேஸ்டேக் குறியீடுடன் சேவ் அவர் டாட்டர்ஸ் (# Save Our Daughters) என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/karur-admk-poster-on-anna-univ-sexual-assault-case-8576526

Related Posts: