புதன், 18 டிசம்பர், 2024

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

 

ora aler

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவில் லேசான மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.

தொடர்ந்து  காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (டிச.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. 

காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில்  10 மணிக்கு பிறகு கனமழையாகவும், படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை நேரத்தில் கனமழை இருக்கும் என்றும் கூறியுள்ளது. 

இதேபோல, நாளையும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/bay-of-bengal-depression-rain-orange-alert-chennai-weather-8448766