உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்யப் போகிறோம் என பொதுமக்களை மிரட்டி 66 கோடிகளைப் கொள்ளை அடித்த மும்பையைச் சேர்ந்தவர்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தார்
கடந்த 01.06.2024 அன்று முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த அழகம்மை என்பவர் இணைய வழி காவல் நிலையம் வந்து, அறிமுகமில்லாத நபர்கள் வாட்ஸ்-ஆப் மூலமாக தங்களை மும்பை போலிஸ் என்று சொல்லி, உங்களுடைய ஆதார் மற்றும் செல்போன் எண்களை பயன்படுத்தி கம்போடியா மற்றும் தைவான் நாடுகளுக்கு மும்பையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கடத்தப்பட்டுள்ளது
இதன் காரணமாக உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி ரூ.27 லட்ச பணத்தை கொள்ளையடித்து விட்டதாக கொடுத்த புகார் கொடுத்தனர். இது தொடர்பாக புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் தியாகராஜன் குற்ற எண்: 95/24 வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், பல்வேறு வங்கி கணக்குகள், ஸ்கைப் ஆன்லைன் வீடியோ கால் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பல்வேறு வங்கிகளின் விவரங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றில் பேசிய விவரங்களை போன்ற பல கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு ரூ. 27 லட்சம் பணம் சென்றது தெரியவந்தது. அது தொடர்பாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையில் கொல்கத்தா சென்று மேற்படி வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் இணைய வழி காவல் நிலையம் வந்தனர்.
அப்போது, அவர்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் மற்றும் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்தபோது மேற்படி வங்கி கணக்குகள் இந்தியா முழுவதும் பல வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இந்த வழக்கில் மோசடியான முறையில் பணம் பெறப்பட்ட குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு, NCRP போர்டல் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பிறரிடமிருந்து மொத்தம் ரூ.66.11 கோடிக்கான புகாரை பெற்றுள்ளனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையால், Mule வங்கி கணக்குகளை விற்ற, சைபர் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இணைய வழி குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை வாங்கி தருவது பணத்தை அவர்கள் சொல்கின்ற வங்கி கணக்கிற்கு மாற்றுவது மற்றும் கிரிப்டோ கரண்சிகளை வாங்கி அவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்ற செயல்கள் செய்து தெரிய வந்தது. இதனையடுத்து கொல்கத்தாவைச் சேர்ந்த மிக முக்கியமான அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்த இணைய வழி காவல் ஆய்வாளர் தியாகராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக அவர்களுடைய கைப்பேசிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல கோடி ரூபாய் மோசடியில் இவர்களுக்கு தொடர்பு இருக்கும் என்று தெரிய வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்கள் மும்பை, அசாம் மற்றும் இதர மாநிலங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய தனி படை அமைத்துள்ளது.
இது பற்றி இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தநாரா சைதன்யா பொதுமக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம், மும்பை போலீஸ் பேசுகிறோம், உங்களுடைய செல்போன் எண்ணை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது, உங்களுடைய வங்கி கணக்கில் சட்டத்திற்கு விரோதமாக பண வருவாய் வந்துள்ளது, FedEx கொரியரில் உங்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது என்று இதுபோன்று எந்த இணைய வழி மோசடி மிரட்டல் அழைப்புகள் வந்தாலும் அதை நம்பி பணத்தை செலுத்த வேண்டாம்.
இது சம்மந்தமாக, உடனடியாக 1930 என்ற இணைய வழி காவல் நிலைய இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதுபோன்று வங்கி கணக்குகள், சிம் கார்ட் பணத்திற்காக யார் கேட்டாலும் கொடுக்கவேண்டாம். மேற்படி வங்கி கணக்குகள், சிம் கார்ட்கள் இணையவழி மோசடிகாரர்களால் பயன்படுத்தப்பட்டு நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு இணைய வழி காவல்துறை ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி, தலைமை காவலர் மணிமொழி, காவலர் பாலாஜி, வினோத் மற்றும் ரோஸ்லின் மேரி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/puducherry-police-arrested-6-persons-for-money-fraud-case-8571756