வெள்ளி, 10 ஜூலை, 2026

மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு; நெற்பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை

 

farmer ariyalur

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் தட்டு பாட்டால் குறுவை நெற்பயிற்களைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக ட்ராக்டர் மூலம் விவசாயி தண்ணீர் பாய்ச்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் தட்டு பாட்டால் குறுவை நெற்பயிற்களைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக ட்ராக்டர் மூலம் விவசாயி தண்ணீர் பாய்ச்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயி தமிழக அரசு மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் அதே போன்று காய்ந்த நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயி சசிகுமார் கண்ணீர் மல்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்.‌ குறு விவசாயியான இவர் தற்போது 3 ஏக்கர் பரப்பளவில் குழவடையான் சித்தேரி அருகில் குறுவை நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இவரைப் போன்று 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் பயிரிட்டு உள்ளனர்.

மோட்டார் பாசனத்தை முழுமையாக நம்பி குறுவை பயிரிட்டு நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் காய்ந்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பலமுறை விவசாயி சசிகுமார் அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தொடர்ந்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் அவரது விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி நெற்பயிர்களானது முழுவதும் பாதிப்புக்குள்ளானது. 

ariyalur farmer 2

இந்த நிலையில் வாடிய நற்பெயர்களை கண்டு மனம் நொந்து போன விவசாயி சசிகுமார் தனது சொந்த செலவில் வாடகைக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ட்ராக்டர் வண்டியில் தண்ணீரை வரவழைத்து குழாய் மூலம்  தண்ணீரை ஊற்றி பயிர்களை காப்பாற்றுவதற்கு கடைசி முயற்சியில் விவசாயி சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.  அவரது முயற்சியை பார்த்த சக விவசாயிகள் மத்தியில் வேதனையை கிளப்பியுள்ளது.

அதேபோல் மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் இவரைப் போன்று 50க்கும் மேற்பட்ட  சிறுகுறு விவசாயிகள் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமா? காய்ந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்றும், வாங்கிய விவசாய கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று பல்வேறு வேதனைக்கு உள்ளாகிய விவசாயிகள் பலரும்  என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர். 

எனவே தமிழக அரசு உடனடியாக தட்டுப்பாடு இன்றி மும்மனை மின்சாரம் வழங்க வேண்டும் பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளனர். 

பின்னர் இதுகுறித்து விவசாயி சசிகுமார் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டத்தில் குருவை சாகுபடி பயிரிட்டு வருகிறோம்.‌ எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மும்முனை மின்சாரம் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் பழுது ஏற்பட்டும், அதேபோன்று குறிப்பிட்ட காலத்தில் நெற் பயிற்களுக்கு தண்ணீரை பாய்ச்ச முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு தான் வாடகைக்கு டிராக்டர் மூலம் தண்ணீரை பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இதில் கூடுதல் செலவு பல மடங்கு ஏற்பட்டுள்ளது.  

தற்போது பயிர்களை காப்பாற்ற முடியாது. அடுத்த சில நாட்களில் மின்சாரம் கொடுத்தால் ஏதோ ஓரளவாவது பயிர்களை காப்பாற்றலாம் என்ற நிலை இருக்கிறது. எனவே தமிழக அரசு மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் அதே போன்று காய்ந்த நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாய சசிகுமார் கண்ணீர் மல்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/tamilnadu/ariyalur-jayankondam-three-phase-electricity-shortage-paddy-crops-damaged-farmer-compensation-request-12150210