செவ்வாய், 7 ஜூலை, 2026

நேரடி கேள்விகளையும் முன்வைத்து

 சிவகாசி அரசுப் பள்ளி விசிட் மற்றும் 'லாஸ்ட் பெஞ்ச்' கமெண்ட் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்குத் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் X பக்கத்தில் மிகக் காட்டமான விளக்கத்தையும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நேரடி கேள்விகளையும் முன்வைத்துப் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 6 7 2026 

அமைச்சர் கீர்த்தனா பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டது மற்றும் 'லாஸ்ட் பெஞ்ச்' குறித்துப் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், "தான் நினைப்பதுதான் சரி எனப் பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல. 'Last Bench' என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவ செல்வங்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.