சனி, 4 ஜூலை, 2026

'நீட் தேர்வை ரத்து செய்'... புதுச்சேரியில் மாணவர்கள் ஆவேச போராட்டம்

 

AISF protest against NEET in Puducherry

'நீட் தேர்வை ரத்து செய்'... தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி புதுச்சேரியில் மாணவர்கள் ஆவேச போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் புதுச்சேரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் மாநில துணைத் தலைவர் பிரவீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர் பெருமன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, நீட் தேர்வை ரத்து செய் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகு என முழக்கமிட்டு, மாணவர்கள் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

source https://tamil.indianexpress.com/india/neet-paper-leak-outrage-aisf-students-protest-in-puducherry-demanding-dharmendra-pradhans-resignation-12133161