பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் இயல்புக்கும் குறைவான மழைப்பொழிவு மற்றும் வறட்சி ஏற்படக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலைக் கையாள்வது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் , மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் . உயர்மட்ட ஆய்வு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, தற்போது எல் நினோ பாதிப்புச் சூழலைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்குப் பிரதமர் அலுவலகம் (PMO) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல் நினோ பாதிப்பால் வறட்சி ஏற்படக்கூடிய சூழலை எதிர்கொள்ள, அனைத்து மத்திய அமைச்சகங்களும் மாநில அரசுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்குத் தகுந்த பயிர் ஆலோசனைகளை வழங்குவதில் மத்திய-மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்கள் தற்போதைக்குக் கூடுதல் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வரும் காலங்களிலும் உணவுப் பொருட்களின் போதுமான இருப்பைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்றும், சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எக்காரணத்தைக் கொண்டும் உயரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்த மழைப்பொழிவு காரணமாக நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத் தொழிலும், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அமைச்சகங்கள் உறுதி செய்ய வேண்டும். கால்நடைத் தீவனப் பயிர்கள், சிறுதானியங்கள் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவது போன்ற உத்திகள் மூலம் வறட்சியின் தாக்கத்தைக் குறைக்கப் பிரதமர் அலுவலகம் வழிகாட்டியுள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மேலும் தீவிரமடையும் என உலக வானிலை அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 2°C வரை அதிகரிப்பதால், உலகளாவிய மழைப்பொழிவு முறை மாறி, கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
6 07 2026
source https://tamil.indianexpress.com/india/el-ni%C3%B1o-drought-threat-amit-shah-and-shivraj-singh-chouhan-chair-emergency-high-level-review-meeting-12143495





