செவ்வாய், 7 ஜூலை, 2026

பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ -வின், குற்றப்பத்திரிகையில் கூடுதல் பெயர் சேர்க்கை

 source https://tamil.indianexpress.com/india/nia-names-hafiz-saeed-in-supplementary-chargesheet-over-pahalgam-terror-attack-12139075


Abu-Qatal-AP-Photo

எழுதியவர்: மகேந்தர் சிங் மன்றால் 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் தீவிர முகாவாக்கிய 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' ஆகியவற்றின் நிறுவனரும் தலைவருமான ஹஃபீஸ் சயீத் என்பவரின் பெயரை தேசிய புலனாய்வு முகமை சேர்த்துள்ளது. ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், ஹஃபீஸ் சயீத் தனது தனிப்பட்ட முறையிலும், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் மாற்று முகாவான டி.ஆர்.எஃப் ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் தலைவர் என்ற முறையிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஃபீஸ் சயீத் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), 1967 ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுத்தல் மற்றும் எல்லை தாண்டிய சதித் திட்டம் தீட்டியதற்கான குற்றவியல் பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதலைத் திட்டமிடுதல், அதற்குத் துணை போதல் மற்றும் அதனைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஆற்றிய பங்கிற்காக, தடை செய்யப்பட்ட (LeT/TRF) அமைப்பும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இந்தக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையானது, என்.ஐ.ஏ அமைப்பால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 1,597 பக்கங்கள் கொண்ட அசல் குற்றப்பத்திரிகையின் தொடர்ச்சியாகும். இதில் பாகிஸ்தானின் பங்கு, ஹஃபீஸ் சயீத்தின் தொடர்பு மற்றும் துல்லியமான அறிவியல் பூர்வமான விசாரணை மற்றும் கள ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 2025 டிசம்பர் 15 அன்று என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கையாள் சாஜித் ஜாட் என்பவரை இந்த வழக்கில் குற்றவாளியாகக் குறிப்பிட்டிருந்தது. அதோடு, 2025 ஜூலை மாதம் நடைபெற்ற 'ஆபரேஷன் மகாதேவ்' என்ற ராணுவ நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் பெயர்களும் அதில் சேர்க்கப்பட்டிருந்தன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலானது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் மதம் சார்ந்த இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று என்.ஐ.ஏ விவரித்துள்ளது. இந்தத் கொடூரமான தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும், ஒரு உள்ளூர் குடிமகனும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.