செவ்வாய், 30 ஜூன், 2015

மகிமை மிக்க நுங்கு!

Natural Medicine I இயற்கை மருத்துவம்'s photo.

‪#‎நுங்கு‬ கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. ‪#‎பனை‬மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும்.
நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண!டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
* நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண!ணை குணமாக்கும்.
* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண!களையும் ஆற்றும்.
* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.
* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.
நாமும் நுங்கின் பயனை உணர்ந்து கோடை காலத்தில் உண!டு நம் உஷ்ணத்தை குறைப்போம்.

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 5232

மீண்டு(ம்) வருமா மழை நீர் சேகரிப்புத் திட்டம்

Vikatan EMagazine's photo.

மனிதனால் இறக்குமதி செய்ய முடியாத ஒரே பொருள் மழை நீர். உணவு உயிர் கொடுக்கிறது. உணவுக்கே உயிர் கொடுப்பது மழை நீர் மட்டுமே. உலகிலேயே மழைநீர் சேகரிப்பிற்கு முன்னோடிகள் தமிழர்கள்தான். மனிதனை தெய்வம் மழை நீர் வடிவில் காக்கும் என்று உணர்த்த அமைந்துள்ள கோவில் குளங்கள், தலை நிமிர்ந்து நிற்கும் ஆயிரம் காலத்து கண்மாய், ஏரிகள், கல்லணை, நகரத்தார் வீடுகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு போன்றவை தமிழர்களின் நீர் வள மேம்பாட்டை எடுத்துச் சொல்லும் ஆதாரங்கள்.

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

Anantha Narayanan's photo.


இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன்,
ஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார்.
சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை,
உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்,
இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்கமுடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன்,
வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும்,
அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்துரத்தமும் வரலாம்,
ஒரு நாளில் சரியாகிவிடும்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணைய தளத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) :
இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) :
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ):
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) :
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ):
நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் :
இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் :
வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 :
கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
குறிப்பு 2 :
இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம்.
இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி பெறுவது கட்டாயம்


பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி பெறுவது கட்டாயம்
இலுப்பூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆர்டிஓ வடிவேல்பிரபு தலைமை வகித்தார். விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை அச்சடிக்கும் முன்னர் காவல் துறை அனுமதிபெற வேண்டும். டிஜிட்டல் பேனர் அச்சடிக்க வருவோரிடம் அச்சடிக்க உள்ள விபரத்தை காவல் துறைக்கு அனுப்பிவைத்து, உரிய அனுமதி ஆணை பெற்று அதன் விவரத்தை டிஜிட்டல் பேனர்களில் வலது ஓரப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டு அச்சடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரை கூறப்பட்டது.
மேலும், இதுதொடர்பான அறிவிப்புகளை அச்சகத்தில் உள்ள விளம்பரப் பலகையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர் வைக்கும் இடங்களைத் தேர்வுசெய்து ஆர்டிஓ மற்றும் காவல் துறைக்கு அனுப்பிவைக்குமாறு செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் சமூக நலத் திட்ட தனி தாசில்தார் மனோகரன், குளத்தூர் தாசில்தார் மரகதவள்ளி, குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் தனம், ஆணையர் அமுதவள்ளி, இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, காரையூர் எஸ்ஐ முத்துகண்ணு மற்றும் அச்சக உரிமையாளர்கள், அனைத்து கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ZamZam water level

Muhammed Siddiq Ali's photo.

ZamZam water level is
around 10.6 feet below the
surface. It is the miracle of
Allah that when Zam Zam
was pumped continuously
for more than 24 hours with
a pumping rate of 8,000
liters per second, water level
dropped to almost 44 feet
below the surface,
BUT WHEN
THE PUMPING WAS STOPPED,
the level immediately
elevated again to 13 feet
after 11 minutes.
8,000 liters per second
means that
8,000 x 60 = 480,000 liters
per minute
480,000 liters per minutes
means
that 480,000 x 60 = 28.8
Million liters per hour
And 28.8 Million liters per
hour
means that 28,800,000 x 24
= 691.2 Million liters per day
So they pumped 690 Millions
liters of ZamZam in 24 hours,
but it was re-supplied in 11
minutes only.
There are 2 miracles here, the
first that ZamZam was re-
filled immediately, & the
second is that Allah Holds the
extra-ordinaril y powerful
Aquifer for not throwing
extra ZamZam out of the
well, otherwise the world
will SINK.
It is the translation
of the word ZamZam, which
means Stop !!!!!!!!!!!!
Stop !!!!!!!!!!!!!!! said by
Hajirah Alaih As Salaam.
Zimam is an Arabic word, it is
the rope / REIN attached to
bridle or noseband & it is
used / pulled to stop the
running animal.

ஒற்றுமை இல்லாததே !!!

தமிழகத்தில் நடக்கக் கூடிய முஸ்லிகளுக்கு எதிரான விரோத போக்குகள் அனைத்திற்கும் முதற்காரணம் இஸ்லாமிய(இயக்கங்க)யர்களிடையே ஒற்றுமை இல்லாததே !!!
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனும் ஒற்றுமையை விரும்பாத இயக்கத் தலைவர்களை மறுமையில் நிறுத்துவான் இன்ஷா அல்லாஹ்....
மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் !!!
நம்ம ஊரு மானியம் ஆடுர் so ஒரு லைக் பன்னுங்கப்பா's photo.

இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி


கேரளாவில் இன்று திறக்க பட்டது இந்தியாவிலேயே
முதல் வட்டி இல்லா வங்கி """"""செய்தி
ஆசை நீண்ட காலமாய்
வைக்கப்பட்டது நீண்ட முழக்கமாய்
வேண்டும் வட்டி வாங்கா வங்கி
என்ற கோரிக்கையை நிறை வெற்றி தர
அரசு நின்றது பின் வாங்கி
ஆனால் ஓன்று இணைந்தார்கள்
நண்பர்கள் எல்லாம் வளைகுடாவில்
அவர்களின் பெரும் முயற்ச்சியால் இன்று
துவங்கப்பட்டது வட்டி இல்லா வங்கி கேரளாவில்
பங்கு பத்திரம்.. மது ...புகையிலை
இவைகளுக்கு இந்த வங்கியில் கடன் இல்லை
முடங்கி போய் இருந்த முஸ்லிம்களின் 50 கோடி
இனி வரும் வட்டி இல்ல கடனாக உங்களை தேடி
இது சம்பந்தமாக பேட்டி அளித்தார் ரிசர்வ் வங்கி செய்தி
தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா
(வங்கி சாரா நிதி நிறுவனத்தை கேளரளா மாநில தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வங்கி அனுமதி அளித்துள்ளது)
இது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கை நீண்ட நாளா
வட்டி இல்லாமல் இனி இங்கு கடன் வாங்கலாம்
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்
இங்கு வட்டி இல்லா கடன் வாங்கி
தொழில் பெறலாம் அபிவிருத்தி
இந்த வங்கி வந்தது பெரும் திருப்த்தி
வைக்கிறார்கள் ஒரு கேள்வி வட்டி வாங்காமல்
வங்கிக்கு நிதி வருமா????
வங்கி தொடர்ந்து நடக்குமா ????
நான் சொல்கிறேன் நடக்கும்
பல வருடங்களை கடந்து நிலைக்கும்
இறைவன் ரஹ்மத் இருந்தால் வளம் கொழிக்கும்
வந்த பணம் வங்கியில் பெருகி திளைக்கும்
வருடத்திற்கு ஆடு 2 குட்டி போடுகிறது
அதிகம் ஆடுதான் அரு படுகிறது
ஆனால் அதிகம் அறுபட்டும் ஊருக்குள்
ஆடுதான் அதிகம் தென்படுகிறது
பண்ணி 10 18 ஒரே நேரத்தில் பெத்து போடுகிறது பிள்ளை
இவளது பெற்றும் அது ஊருக்குள அதிகம் இல்ல
இவளதுக்கும் அது அதிகமும் அறுபடல
காரணம் ஆட்டுக்கு இருக்கிறது அல்லாஹ்வின் கிருபை
பன்னிக்கு இல்லை அல்லாஹ்வின் பரக்கத்
அதோடு சபிக்கிறான் பண்ணியின் உறவை
அதே போல் தான் இந்த வங்கிக்கு
கிடைக்கும் அல்லாஹ்வின் பரக்கத்
அல்லா நாடட்டும் இதே போல் தேசம் முழக்க
வங்கி திறக்க
சிரமமில்லாமல் வட்டி இல்லா வங்கி நடக்க

Nikkah

Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P)

மனக்குமுறலுடன் ஒரு பதிவு.
படத்தில் Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P) தன் மகள் நிஷ்ரின் ஹுஸைனுடன்.
2002 குஜராத் இனப்படுகொலையில் தன்வீட்டிலேயே அடைக்கலம் தேடிவந்த அப்பகுதி மக்களோடு எறித்துக்கொல்லப்பட்டார்.
மனித மிருகங்கள் தங்களை தாக்கியபோது உயிர்ப்பிச்சைகேட்டு மிருகங்களின் ராஜா தற்ப்போதைய பாரதப்பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அதற்க்கு அந்த ராஜா தீய வார்த்தைகளால் திட்டி இணைப்பை துண்டித்தார்.
இந்த ராஜா தற்ப்பொழுது
"Beti bachao Beti padhao"
(பெண் சிசுவை காப்போம் கல்வி கற்ப்பிப்போம்)
எனும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் இப்பிரச்சாரத்தை முடுக்கிவிட தங்களது பெண் குழந்தைகளோடு Selfie எடுத்துக்கொண்டு பகிர்ந்து கொள்ளுமாறு ஆர்வப்படுத்தியுள்ளார் இந்த ராஜா.
ராஜாவிடத்தில் நாம் கேட்பது தன் மகளுடன் Selfie எடுத்துக்கொள்ளவும் கல்வி கற்ப்பிக்கவும் இவரைப்போன்ற பல தந்தைகள் இன்று உயிரோடு இல்லை பல மகள்கள் கருவிலேயே குத்திக்கொல்லப்பட்டார்கள்.
இச்செயலைப்புரிந்த உங்கள் கூட்டத்தாருக்கு என்ன யோக்கிதை இருக்கிறது இப்பிரச்சாரத்தை மேற்க்கொள்ள?
யா அல்லாஹ் இவ்வுலக நெருப்பைவிட 70 மடங்கு கொடிய நரக நெருப்பில் இம்மனித மிருகங்களை பொசுக்குவாயாக.

அபு நதீம்'s photo.
அபு நதீம்'s photo.

சனி, 27 ஜூன், 2015

Quran

(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக்கின்றான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
அன்றி, (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதனை நீங்கள் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உங்கள்மீது நாம் இறக்கி வைத்தோம். அன்றி, நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 16:63,64

கொய்யா! பழங்கள்!! பலன்கள்!!!

Vikatan EMagazine's photo.


குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.
100 கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது.
இது ஒரு நாள் தேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக் கொள்வது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் கிருமித் தொற்று, சில வகையான புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காக்கிறது. மேலும் ரத்தக் குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புக்கள் போன்ற உறுப்புக்களின் அடிப்படைக் கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இருக்கிறது.
வைட்டமின் சி-யைத் தவிர வைட்டமின் ஏ-வும் இதில் நிறைவாக இருப்பதால், கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. வாழைப் பழத்தைப்போலவே இதிலும் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. பொட்டாசியமானது செல்களின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் மிகவும் அவசியம்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயல் இழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்

ஊருக்கு பெருமைசேர்கும் ஜமால்


முக்கண்ணாமலைபட்டியில் இருந்து உருவாகி வரும் தடகள வீர ர் ஜமால் சேம்பியன் அவர்கள் மாநில அளவிலும் மாவட்ட அளவிளான தடகள போட்டியில் பங்கு பரிசுகள் வாங்கிய ஊருக்கு பெருமைசேர்கும் ஜமால் சேம்பியனையும் வாழ்த்துவோம்


வெள்ளி, 26 ஜூன், 2015

Hadis


தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.

Prophet (sal) Way???? or Fore Fathers Way????

சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்

இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படும் எந்த சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்
சவுதி அரசு திட்டவட்டம்
=======================================
ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று இந்த நிலையை மாற்றி ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதர்கு பல நாடுகள் முயர்ச்சித்து வருகின்றன
இந்த நிலையில் இந்த இழி செயல்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள சவுதி அரேபியா
இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படாமல் ஒத்து போகும் சர்வதேச சட்டங்களை மட்டுமே சவுதி அரேபியா மதிக்கும் என்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சவுதி அரேபியா அதே நேரத்தில் இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படும் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் புறகணிப்பதாகவும் எதிர்பதாகவும் தெரிவித்துள்ளது
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்தை கேளி கிண்டல் செய்வதையும் இஸ்லாத்தை விமர்ச்சிப்பதையும் எந்த சூழலிலும் சவுதி அரேபிய பொறுத்து கொள்ளாது என்று கூறியுள்ள சவுதி அரேபியா
மத உணர்வுகளை புண்படுத்துவது தான் கருத்து சுதந்திரம் என்றால் அந்த கருத்து சுதந்திரத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் காலில் போட்டு மிதிப்பதாகவும் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது
நம்ம ஊரு மானியம் ஆடுர் so ஒரு லைக் பன்னுங்கப்பா's photo.

வியாழன், 25 ஜூன், 2015

நோன்பின்

ஸஹர் உணவு.
சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறித்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1836
ஸஹர் உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை இதிலிருந்து அறியலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2agij8PsGI-JlZDOOOVYuaYqjBo6La60uoGOuEn4_DrdjFMfLOl4Z_euP1eZmi6nMTkUJURQ9TTR1Qh2XOWi2s4GJQ_ws8xCMF70FS8cKsV_0Kc5EwfCrpHv67GCRKrqHZvEzJF8abd0/s1600/Arrow_Blue_Blinking.gif
ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்
ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 576, 1134, 1921, 575
தமிழகத்தில் சுப்ஹுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கும் போது ஸஹர் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஸஹர் செய்து விட்டு உறங்கி, சுபுஹ் தொழுகையைப் பாழாக்கி விடுகின்றனர்.
ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு ஆயத்தமாகும் அளவுக்குத் தாமதமாக ஸஹர் செய்வதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையாகும்.
ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதிட, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் போதுமானதாகும். சுபுஹுக்குப் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் இருக்கும் போது தான் ஸஹர் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2agij8PsGI-JlZDOOOVYuaYqjBo6La60uoGOuEn4_DrdjFMfLOl4Z_euP1eZmi6nMTkUJURQ9TTR1Qh2XOWi2s4GJQ_ws8xCMF70FS8cKsV_0Kc5EwfCrpHv67GCRKrqHZvEzJF8abd0/s1600/Arrow_Blue_Blinking.gif
ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக் கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.
பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ரமளான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.
பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில் (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 621, 5299, 7247
மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது.
நூல்கள்: முஸ்லிம் 1829, புகாரி 1919
சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.
நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.
நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.
ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ்செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.
மாற்று மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.
பின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள்.
இன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத்தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது.
ஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?
கடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2agij8PsGI-JlZDOOOVYuaYqjBo6La60uoGOuEn4_DrdjFMfLOl4Z_euP1eZmi6nMTkUJURQ9TTR1Qh2XOWi2s4GJQ_ws8xCMF70FS8cKsV_0Kc5EwfCrpHv67GCRKrqHZvEzJF8abd0/s1600/Arrow_Blue_Blinking.gif
விடி ஸஹர்
தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.
உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.
ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.
சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.
இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம்.
இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம்.
அவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2agij8PsGI-JlZDOOOVYuaYqjBo6La60uoGOuEn4_DrdjFMfLOl4Z_euP1eZmi6nMTkUJURQ9TTR1Qh2XOWi2s4GJQ_ws8xCMF70FS8cKsV_0Kc5EwfCrpHv67GCRKrqHZvEzJF8abd0/s1600/Arrow_Blue_Blinking.gif
அதிகமாக உண்பது
நோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.
மார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.
நோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல! மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது.
நமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது.
நோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
அதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.
அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
வகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.

 

 

நோன்பின் நேரம் :

சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!
அல்குர்ஆன் 2:187
இவ்வசனத்தில் ஃபஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான முஸ்லிம்களிடம் காணப்படும் அறியாமையைச் சுட்டிக் காட்ட இது பொருத்தமான இடமாகும்.
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுமார் இரவு மூன்று மணியளவில் ஸஹர் செய்வதற்காக எழுந்து உண்பார்கள். ஸஹர் முடிந்ததும் 3.30 மணியளவில் அல்லது நான்கு மணியளவில் நிய்யத் செய்வார்கள். (நிய்யத் பற்றிப் பின்னர் விளக்கப்படவுள்ளது.)
இவ்வாறு நிய்யத் செய்த பின் ஃபஜ்ரு நேரம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ மீதமிருக்கும். ஆனாலும் நிய்யத் செய்து விட்டதால் அதன் பிறகு எதையும் உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது தவறாகும்.
எந்த நேரம் முதல் உண்ணக் கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டானோ அந்த நேரம் வரை உண்பதற்கு நமக்கு அனுமதியுள்ளது. நாம் நிய்யத் செய்து விட்டால் கூட, எப்போது முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அப்போது முதல் நோன்பு நோற்கிறேன் என்பது தான் அதன் பொருள்.
எனவே 5.40 மணிக்கு சுபுஹ் வேளை வருகிறது என்றால் மூன்று மணிக்கே நிய்யத் செய்தாலும் 5.40 வரை உண்ணலாம்; பருகலாம்; இல்லறத்திலும் ஈடுபடலாம்.
இன்னொரு அறியாமையையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
சுபுஹ் நேரம் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது என்று வைத்துக் கொள்வோம். 5.29 வரை உண்ணலாம்; பருகலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோன்பு அட்டவணை என்று வெளியிடப்படும் அட்டைகளில் ஸஹர் முடிவு 5.20 என்றும், சுபுஹ் 5.30 என்று போடும் வழக்கம் உள்ளது.
அதாவது சுபுஹ் நேரம் வருவதற்குப் பத்து நிமிடம் இருக்கும் போதே ஸஹரை முடிக்க வேண்டும் என்று இந்த அட்டவணை கூறுகின்றது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும்.
ஸஹர் முடிவும், சுபுஹ் நேரத்தின் துவக்கமும் ஒன்று தான். ஸஹர் முடிந்த மறு வினாடி சுபுஹ் ஆரம்பமாகி விடும். ஸஹர் முடிவுக்கும், சுபுஹுக்கும் இடைப்பட்ட நேரம் எதுவுமில்லை.
எனவே எப்போது சுபுஹ் நேரம் ஆரம்பமாகிறதோ அதற்கு ஒரு வினாடிக்கு முன்னால் வரை உண்ணவும் பருகவும் அனுமதி உள்ளது.
சுபுஹிலிருந்து நோன்பு ஆரம்பமாகின்றது என்றால் எது வரை நோன்பு நீடிக்கின்றது?
பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!
அல்குர்ஆன் 2:187
இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியது அவசியம்.
மார்க்கம் பற்றிய அறிவு இல்லாத சிலர், ரமளான் அல்லாத நாட்களில் பகல் வரை சாப்பிடாமல் இருந்து விட்டு அரை நோன்பு வைக்கும் வழக்கம் உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.
நோன்பு என்பது சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை முழுமையாக வைக்க வேண்டுமே தவிர அரை நோன்பு, முக்கால் நோன்பெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.
சூரியன் மறைந்தவுடன் இரவு ஆரம்பமாகி விடுகின்றது. ஆனாலும் சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்தே நோன்பு துறக்கும் வழக்கம் பெரும்பாலான ஊர்களில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.
நோன்பு துறப்பதைப் பத்து நிமிடம் தாமதமாகச் செய்வது பேணுதலான காரியம் என்று இவர்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.
சூரியன் மறையும் வரை என்ன? அதற்கு மேலும் என்னால் பட்டினி கிடக்க முடியும் என்று நினைப்பதும், நடப்பதும் ஆணவமான செயலாகத் தான் கருதப்படுமே தவிர பேணுதலாக ஆகாது.
இறைவா! நான் பசியைத் தாங்கிக் கொள்ள இயலாத பலவீனன். நீ கட்டளையிட்டதற்காகத் தான் இதைத் தாங்கிக் கொள்கிறேன் என்ற அடக்கமும் பணிவும், விரைந்து நோன்பு துறக்கும் போது தான் ஏற்படும்.
என் அடியானைப் பாருங்கள்! எப்போது சூரியன் மறையும் என்று காத்திருந்து மறைந்தவுடன் அவசரமாகச் சாப்பிடுகிறான். இவ்வளவு பசியையும் எனக்காகத் தான் இவன் தாங்கிக் கொண்டான் என்று இறைவன் இத்தகைய அடியார்களைத் தான் பாராட்டுவான்.
இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இப்படித் தான் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957
இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1954
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம், போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கு அம்மனிதர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே! என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே!என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1941, 1955, 1956, 1958, 5297
இன்னும் பகல் உள்ளதே என்று அம்மனிதர் சுட்டிக் காட்டிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. சூரியன் மறையும் நேரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாத பேணுதலை யார் கண்டுபிடித்தாலும் அது நமக்குத் தேவையில்லை.

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?.
மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?
இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2agij8PsGI-JlZDOOOVYuaYqjBo6La60uoGOuEn4_DrdjFMfLOl4Z_euP1eZmi6nMTkUJURQ9TTR1Qh2XOWi2s4GJQ_ws8xCMF70FS8cKsV_0Kc5EwfCrpHv67GCRKrqHZvEzJF8abd0/s1600/Arrow_Blue_Blinking.gif
ரமளான் மாதத்தை முடிவு செய்தல்
நோன்பைக் கடமையாக்கிய இறைவன், யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறான். இவ்வசனத்தை ஆரம்பமாக நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
ரமளான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத் தான் அடைவார்கள் என்பதால் தான், யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் மதீனாவில் பிறை காணப்பட்ட போதெல்லாம் அந்தச் செய்தியை தம்மால் இயன்ற அளவுக்கு அறிவிக்குமாறு எந்த ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. நான்கு கலீபாக்கள் காலத்திலும் இத்தகைய ஏற்பாடு எதையும் செய்யவில்லை.
மாதத்தை எப்படி முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்.
நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவக்குங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909, 1907
மேக மூட்டமாக இருந்தால் வானில் பிறை இருப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது. எனவே உயரமான உஹது மலை மீது ஏறிப் பாருங்கள் என்றோ, அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றோ கூறாமல், பிறை பிறக்கவில்லை என்று முடிவு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒரு பகுதியில் காணப்படும் பிறை அப்பகுதியினரை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதைப் பின்வரும் நிகழ்ச்சி மேலும் உறுதி செய்கின்றது.
என்னை உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் ஒரு அலுவலுக்காக அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த அலுவலை முடித்தேன். நான் அங்கே இருக்கும் போது ஒரு வெள்ளிக்கிழமை இரவு ரமளானின் முதல் பிறையைப் பார்த்தேன். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனா வந்தடைந்தேன். என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) விசாரித்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறை பார்த்தோம் என்று கூறினேன். நீ பிறை பார்த்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் பார்த்தேன். மக்களும் பார்த்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்களே மறு பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை நாங்கள் நிறைவு செய்யும் வரை நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரலி) பிறை பார்த்ததும், அவர்கள் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், போதாது! இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம் 1819