
நீலகிரியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் முடிய 45 கிலோமீட்டர் தூரத்திற்கு ரெயில் தடம் உள்ளது. இதில் 208 வளைவுகளும், 250 பாலங்களும், 16 குகைகளும் உள்ளன. இவ்வளவு குறுகிய பாதையில் இத்தனை தடைகளைதாண்டி அமைக்கப்பட் ஊட்டி ரெயில்தான் தினமும் ஏராளமானவர்களை சுகமாக பயணிக்க வைக்கிறது. இது 10.6 கி.மீ. வேகத்தில் மெதுவாக செல்லும்.