நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்
==========================================
==========================================
உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் ரமளான் நோன்பை நோற்று வரும் நிலையில் சீன முஸ்லிம்களை சீன அரசங்காம் துயரத்தில் தள்ளியுள்ளது
சீனாவில் முஸ்லிம்கள் பெருபாண்மையாக வாழும் மாநிலம் சின்சியாங்
இங்கு உருவாகியுள்ள இஸ்லாமிய எழுட்ச்சி சீன அரசின் கம்யுனிச கொள்கைகளை புதை குழிக்கு அனுப்பிவிடும் என்று சீன அரசு அஞ்சுவதால் அந்த இஸ்லாமிய எழுட்சியை அதிகாரத்தின் துணை கொண்டு தடுக்கும் முயர்ச்சியில் சீன அரசு இறங்கியுள்ளது
சின்சியாங் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அரசு நிறுவனங்களோடு தொடர்ப்புடையவர்கள் யாரும் நோன்பு வைக்க கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்க படும் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது
சீன அரசின் இந்த அறிவிப்பு உலக முஸ்லிம்கள் இடையே கடுமையான கொந்தழிப்புகளை உருவாக்கியுள்ளது
எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலை கழகம் இதர்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு இந்த பிரச்சனையில் உலக சமுதாயமும் ஐநா சபையும் உடனடியாக தலையிடவேண்டும் என்றும் சீன அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது
இஸ்லாமிய நாடுகளின் துணையுடன் இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு எடுத்து செல்ல போவதாகவும் அல்அஸ்ஹர் பல் கலைகழம் தெரிவித்துள்ளது
இதர்கிடையே சீன அரசின் எதிர்ப்பையும் மீறி சின்சியாங் மாகன முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றனர்
இறைவன் அந்த மக்களுக்கு பாது காப்பையும் மன உறுதியையும் வழங்க நாம் பிரார்திப்போம்
ஒரு காலத்தில பலமிக்க வல்லரசாக திகழ்ந்த சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறிய போது அதில் இருந்து பல இஸ்லாமிய குடியரசுகள் உருவானதை போல் சீன உடைந்து சிதறும் போது அங்கிருந்தும் பல இஸ்லாமிய குடியரசுகள் உருவாகும்
சோவியத் கூட்டமைப்புக்கு முடிவுரை எழுதிய முஸ்லிம்கள் சீனவின் அடக்கு முறைகளுக்கும் முடிவுரை எழுதுவார்கள் இன்ஷாஅல்லா