செவ்வாய், 16 ஜூன், 2015

அமரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் எதிர்ப்பில் மாவீரன்

Manik Veeramani's photo.

தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நொடியில் சதாமின் இதழில் உதித்த ஒரு எகத்தாள சிரிப்பின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது...
"நான் சர்வாதிகாரி தான்..ஆனால் இந்த சதாம் உசேன்  தவிர வேறு எவனாலும் பன்முக தன்மை கொண்ட ஈராக்கை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக கொண்டு செல்லவே முடியாது..இதை விரைவில் அனைவரும் புரிந்து கொள்வீர்கள்" என்றுதான் நினைத்திருப்பானோ அந்த மாவீரன்?
சதாமின் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பவன் நானல்ல..
ஆனால் ஒட்டுமொத்த அரபு தேசத்தில் சதாம் உசேன் என்கிற ஒரே ஒருவனால் மட்டுமே அமரிக்காவை எதிர்க்க முடிந்தது என்றால்,அதனால் உயிரை இழக்க முடியும் என்றால்
அவனை விட மாவீரன் எவன் இருக்க முடியும்??
வாழும் காலத்தில் எப்படி எப்படியோ இருந்தாலும் சாகும் காலத்தில் ஒரு கையில் குர்ஆனையும்,மற்றொரு கையில் நீட்டிய ஆட்காட்டி விரலையும் அடையாளமாக கொண்டிருந்தான் இந்த வீரன்....
சதாம் முழுமையான இஸ்லாமியனா என்பதை குறித்து எனக்கு ஆய்வில்லை...
ஆனால் அவன் அமரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் எதிர்ப்பில் மாவீரன் என்பதில் எனக்கு ஐயமில்லை...

Related Posts: