
மனிதனால் இறக்குமதி செய்ய முடியாத ஒரே பொருள் மழை நீர். உணவு உயிர் கொடுக்கிறது. உணவுக்கே உயிர் கொடுப்பது மழை நீர் மட்டுமே. உலகிலேயே மழைநீர் சேகரிப்பிற்கு முன்னோடிகள் தமிழர்கள்தான். மனிதனை தெய்வம் மழை நீர் வடிவில் காக்கும் என்று உணர்த்த அமைந்துள்ள கோவில் குளங்கள், தலை நிமிர்ந்து நிற்கும் ஆயிரம் காலத்து கண்மாய், ஏரிகள், கல்லணை, நகரத்தார் வீடுகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு போன்றவை தமிழர்களின் நீர் வள மேம்பாட்டை எடுத்துச் சொல்லும் ஆதாரங்கள்.