சனி, 20 ஜூன், 2015

என்கவுண்டரில் ஒரு எஸ்ஐ கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்காப்புக்காக சுட நேர்ந்ததாகவும், அந்த இளைஞர் தாக்கியதால் தனக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்ததாகவும் எஸ்ஐ. காளிதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது, மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு அது போலி என்கவுண்டர் என்று முடிவுசெய்து எஸ்.ஐ. காளிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். என்கவுண்டரில் ஒரு எஸ்ஐ கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.
இந்த "மோதல் சாவு" பற்றி எட்டு மாதங்களுக்கு முன் நேர்படப் பேசுவில் விவாதித்தது பசுமையாக நினைவில் நிற்கிறது.