செவ்வாய், 30 ஜூன், 2015

மகிமை மிக்க நுங்கு!

Natural Medicine I இயற்கை மருத்துவம்'s photo.

‪#‎நுங்கு‬ கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. ‪#‎பனை‬மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும்.
நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண!டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
* நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண!ணை குணமாக்கும்.
* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண!களையும் ஆற்றும்.
* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.
* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.
நாமும் நுங்கின் பயனை உணர்ந்து கோடை காலத்தில் உண!டு நம் உஷ்ணத்தை குறைப்போம்.