நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்". அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244
//எனினும் வீடும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ?// அன்னை ஆயிஷா அஞ்சியது நடந்து விட்டது.. நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று அங்கு இரானியர்கள் பாகிஸ்தானிகள் இந்தியர்கள் அதை ஒரு தர்காவாக நினைத்து வணக்கத்தலமாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..நான் சாட்சி. மதீனா பள்ளியின் இஸ்லாமிய காவலர்கள் சாட்சி. ரசூல் ஸல் அவர்களின் வீடு அதன் அருகில் ஒரு பச்சை கலர் டூம்.டூமில் கலர் மாறுகிறது என்று கையை தொட்டு நெத்தியில் அடிக்கிறாங்க.. பெரிய மஸ்ஜித் ஆக தோன்ற வேண்டும் என்பதற்காக ரசூல் ஸல் அவர்களின் வீட்டை பள்ளியுடன் இணைத்து விட்டார்கள். பள்ளிக்கும் வீட்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விட்டது. ரசூல் ஸல் அவர்களின் வீட்டை , தங்க கலரில் ஜன்னல் போல செய்து அழகு படுத்தி அது ஜொலிக்கிறது. மக்களை பரவசம் ஊட்டுகிறது அதை சுற்றி இஸ்லாமிய காவலர் கூட்டம். ஹாதா ஹராம் ஹாதா ஹராம், ஹாதா ஹராம்.. லா லா, ரோஹ் ஹினா. என்று இஸ்லாமிய காவலர்கள் படும் அவஸ்தை பார்க்க பாவமாக இருக்கும். பித்னா செய்பவர்களை எத்தனை காலம்தான் இப்படி தடுப்பாபார்களோ.???? சவூதி தமிழ் சலபிகளிடம் இதற்கு விளக்கம் கிடைக்குமா?
மதீனாவில் கிப்லத்தைன் என்று ஒரு பள்ளி இருந்தது. ரசூல் ஸல் அவர்கள் வஹீ படி மீண்டும் கிப்லா திசை மாறி தொழுத பள்ளி. பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு புறமும் கிப்லா இருக்கும்.அங்கு வருபவர்களில் பாகிஸ்தானிகள் சில இந்தியர்கள் , எதிர் கிப்லாவிலும் இரண்டு ராக்கத் தொழுவார்கள். இந்த அனாச்சாரங்களினால் , நீண்ட ஆலோசனைக்கு பிறகு சவூதி அரசாங்கத்தால் ஒரு கிப்லா நார்மல் சுவராக மற்ற பட்டு விட்டது . என்பது தெரியுமா?
கப்று தரிசிக்க பெண்கள் செல்ல கூடாது என்ற கொள்கை கொண்ட மஜ்ஜிது நபவியில் பெண்கள் ஜியாரத்தை டைம் வைத்து அனுமதிக்கிறார்களே? கேட்பார்களாதமிழ் சலபி குன்றுகள் ? ஊதியத்திற்கு மார்க்கம் சொல்லுகிறோம்..இப்படி எல்லாம் கேட்க முடியுமா? என்பார்கள். மதீனாவில் ஏன் மஸ்ஜிது நபவியில் திராவிஹ் 22 ரக்காத், அதே மதீனாவில மற்ற பள்ளிகளில் 8 இரக்கத்? என்று கேட்பார்களா?.
இந்த விசயங்களில் சவூதி கோவேர்மென்ட் அமைதியாக இருப்பது, இது சரியாக அனுமதிக்க பட்ட விசயம் என்று அல்ல. மக்காவில் நான்கு மத்கபு தொழுகைகள் நடந்து கொண்டு இருந்ததை மாற்றி ஒரே தொழுகை ஆக்கியது போல, மதீனாவில் மற்றும் சவுதியில் மற்ற இடங்களில் தர்காக்கள் தரை மட்டம் ஆகியது போல, கிபலைத்தைன் பள்ளியில் ஒரு கிப்லா அடைக்க பட்டது போல, ஒரு காலத்தில், இப்போது கையால் தடுக்க பட்டு கொண்டு இருக்க படுகின்ற அனாச்சாரங்கள் கை மீறும் போது ரசூல் ஸல் அவர்களின் வீடும் தனி ஆக்க படலாம். டூம் இடிக்க படலாம். இன்ஷா அல்லாஹ். சவூதி கோவேர்மென்ட் இஸ்லாத்தை நேர் வழியில் பின் பற்றுகிறது.. அவர்கள் நேரத்திற்கு காத்து கொண்டு இருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ்.