புதன், 15 ஏப்ரல், 2015

இஸ்லாமிய பெண்கள் பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையம் செல்ல தேவையில்லை...!






கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் காவல்நிலையத்தில் தென்னூர் பகுதி பெண்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக நீண்ட நேரம் குற்றவாளி போல காக்க வைக்கப்பட்டதை பார்த்த நாம் ஆய்வாளரிடம் இஸ்லாமிய பெண்களை காவல்நிலையம் அழைக்கக்கூடாது எனவும் இது சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் ஐவாஹிருல்லாஹ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது ஜெயலலிதா பதிலுரையில் பெண்களை காவல் நிலையம் அழைத்து விசாரிக்காமல காவலர்கள் நேரடியாக சென்று விசாரிக்குமாறு உத்திரவிடுவதாக கூறிப்பிட்டதை சொல்லி முறையிட்ட போது ஆய்வாளர் அது போண்று அரசானை இல்லையென்றும் ஆதாரம் இருந்தால் நடைமுறைப்படுத்த தயராக இருப்பதாகவும் கூறி வக்குவாதம் செய்தார்.இதே போண்று சம்பவம் அரியமங்கலம் காவல்நிலையத்திலும் நடைப்பெற்றதையோட்டி பேராசிரியரை தொடர்பு கொண்டோம்,பேராசிரியர்
ஜவாஹிருல்லாவின் அறிவுறுத்தலின் படி தலைமை செயலாளருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சட்டமன்ற குறிப்புகளை கேட்கும்படி கூறியதையடுத்து நாங்கள் மனு செய்தோம்..கீழ்கண்ட பதில்கள் சட்டமன்ற பேரவை செயலாளரிடம் எனக்கு கிடைக்கப்பெற்றது...


இதன் நகலை ஆய்வாளரிடம் காண்பித்தபோது அவர் வருத்தம் தெரிவித்தோடு வருங்காலங்களில் நடைமுறைபடுத்துவதாக உறுதி அளித்தார்..