ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நமது நாட்டில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய்ந்திட

நமது நாட்டில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய்ந்திட 1979-ல் "மண்டல் கமிசனும்" - 2004 - ல் "ரங்கநாத் மிஸ்ரா கமிசனும்" - 2005 - ல் "சச்சார் கம்மிட்டி" -யும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது....ஆயிரம் ஆயிரம் பக்கங்களுக்கு மேலான அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை குறித்த அவர்களது அடிப்படை அறிக்கை இதுவாகத்தான் இருக்கிறது....
"இந்தியாவில் மற்ற எல்லா மதத்தினரையும் விட - சாதியினரையும் விட முஸ்லிம்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது...மிகவும் தாழ்ந்த நிலையில் - விளிம்பு நிலையில் அவர்களது வாழ்க்கைதரம் - கல்வி - பாதுகாப்பு - மக்கள் தொகை ஆகியன உள்ளது.....இது இன்னும் இன்னும் மோசமாகி கொண்டேதான் போகும் ... காரணம் அரசியல்வாதிகள் இந்தியாவில் முஸ்லிம்களை பல பிரிவுகளாக பிரித்துவைத்து - அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை கூட கேட்க இயலாவண்ணம் ஏமாற்றி - தங்களது அதிகார பலன்களை அவர்களை கொண்டே பெற்று வருகிறார்கள்...ஒரு கட்டத்தில் தாங்கள் இழந்தவைகள் போக - எஞ்சியுள்ளவையையேனும் காப்பாற்றிக்கொள்ள ஆயுதங்கள் கையிலெடுத்தே ஆக வேண்டும் என்னும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்..."
இனியும் முஸ்லிம்கள் எப்பொழுதுதான் சிந்திக்க முனைவோம்...? அனைத்தையும் இழந்து கொண்டிருக்கும் நமது சமுதாயம் - இனியேனும் விழிப்புணர்வு பெற்று - தன்னை தற்காத்து கொள்ள துவங்குமா...?
அல்லது ஆணவத்தாலும் - அறியாமையினாலும் - ஒற்றுமையின்மையினாலும் அழிவை நோக்கிதான் பயணிக்குமா.....?
ஒருபுறம் கல்வி அறிவில்லை; ஏழ்மையே கதி; இருக்க வீடில்லை; கேட்க நாதி இல்லை.....
மறுபுறம் துளியும் முன்னேறிவிடாமல் - வாழ்ந்துவிடாமல் தடுத்தே தீர வேண்டும்; இந்த சமுதாயத்தை அழித்தே தீர வேண்டும் என்னும் கங்கணத்தோடு நன்கு திட்டமிடப்பட்ட கொடிய செயல் திட்டங்களுடன் நான்கு முனைகளிலும் சுற்றி வளைக்கப்பட்டுள்ள "காவி தீவிரவாதிகளின்" முற்றுகை.....
என்ன செய்ய போகிறோம்......என் நேசமிகு உறவுகளே....?
என்னதான் செய்ய போகிறோம்.....?
--T.H.MUT